எலான் மஸ்க்கையே முந்திவிட்டேன்… யூடியூபர் செய்த அசத்தலான காரியம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
இங்கிலாந்து நாட்டை சேர்ந்த யூடியூப் பிரபலம் ஒருவர் நான் எலான் மஸ்க்கை விட உலகின் பெரிய பணக்காரராக இருந்தேன். நான் 7 நிமிடங்களுக்கு பெரிய பணக்காரராக இருந்தபோது எலான் மஸ்க் என்னைவிட குறைந்த சொத்து மதிப்புடையவராக இருந்தார் எனப் பரபரப்பை கிளப்பியுள்ளார்.
மேக்ஸ் ஃபோஷ் எனும் யூடியூப் பிரபலம் இங்கிலாந்து நாட்டில் வசித்துவருகிறார். இவரை 6 மில்லியன் ஃபாலோயர்கள் பின்தொடரும் நிலையில் உலகின் மூத்த பணக்காரராக ஆக வேண்டும் என்று இவருக்கு ஆசை வந்திருக்கிறது. இதற்காக லண்டனில் ஒரு நாற்காலி வைத்த அலுவலகத்தைத் துவங்கிய இவர் ஒரு நிறுவனத்தை இயக்கி வருவதைப்போன்று சான்றிதழையும் பெற்றிருக்கிறார்.
தனது நிறுவனத்திற்கு “அன்லிமிடெட் மினி லிமிடெட்“ என்று பெயரிட்ட ஃபோஷ் தன்னுடைய நிறுவனத்தில் 10 பில்லியன் பங்குகள் இருக்கிறது எனக் கூறி அதன் ஒவ்வொரு பங்கையும் தலா 50 பவுண்டுகளுக்கு வர்த்தக மையத்தின் மூலம் விற்பனை செய்ய முயற்சித்து இருக்கிறார். இவருடைய முதல் பங்கை ஒரு பெண்மணி ஆன்லைனில் 50 பவுண்டுகளுக்கு வாங்கியும் உள்ளார்.
தொடர்ந்து வர்த்தக ஏலத்தில் கலந்துகொண்ட ஃபோஷின் 10 பில்லியன் பங்குகள் 500 பில்லியன் டாலர்கள் எனக் கணக்கிடப்பட்டு இருக்கிறது. இந்தத் தொகை உண்மையாக இருக்கும் பட்சத்தில் உலகின் முதல் பணக்காரர் மேக்ஸ் ஃபோஷாகத்தான் இருப்பார்.
ஆனால் உண்மையில் மேக்ஸ் ஃபோஷிடம் நிறுவனமும் இல்லை, அந்த நிறுவனத்தில் எந்தப் பொருட்களும் தயாரிக்கப்படவும் இல்லை. இதனால் நிறுவனம் துவங்கிய வெறும் 7 நிமிடங்களில் வர்த்தக மையத்தைச் சார்ந்த அதிகாரிகள் உங்களது நிறுவனத்தில் எந்த வர்த்தகமும் நடைபெறவில்லை. ஒருவேளை இப்படியே நீங்கள் தொடர்ந்தால் புகார் தொடுப்பதற்கு வாய்ப்பிருக்கிறது என எச்சரித்துள்ளனர்.
வர்த்தக அதிகாரிகளின் எச்சரிக்கையைத் தொடர்ந்து ஃபோஷ் உடனடியாக தனது நிறுவனத்தை கலைத்தும் இருக்கிறார். பார்ப்பதற்கு ஃபோஷ் செய்த காரியம் விளையாட்டாக இருக்கலாம். ஆனால் வர்த்தக நிறுவனத்தைப் பொறுத்தவரைக்கும் இவர் 7 நிமிடங்களுக்கு பெரிய பணக்காரராக இருந்திருக்கிறார். மேலும் வர்த்தக கேபிடல் செஷனில் இருக்கும் ஓட்டையும் இவருடைய செயலால் வெட்ட வெளிச்சமாகி இருக்கிறது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com