மனித முகமே எனக்கு வேண்டாம்… விரக்தியில் இளைஞர் செய்த காரியம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஜெர்மனியில் மனித முகத்தோற்றத்தையே விரும்பாத இளைஞர் ஒருவர் ஒட்டுமொத்த முகத்திலும் பச்சை குத்தி, முகத்தையே மாற்றி வைத்திருக்கும் சம்பவம் பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
முதுமையிலும் இளமையாகக் காட்டிக்கொள்ள வேண்டும் என்பதற்காக பலரும் பியூட்டி பார்லர்களுக்கு படையெடுத்து வருகின்றனர். ஆனால் ஜெர்மனியில் வசித்துவரும் இளைஞர் ஒருவர் தனக்கு அழகு வேண்டாம். மனித முகத்தையே நான் விரும்பவில்லை எனக் கூறி தனது ஒட்டுமொத்த முகத்திலும் Puzzle அட்டையைப் போன்று பச்சைக் குத்திக் கொண்டுள்ளார். மேலும் புதுமையைக் காட்ட வேண்டும் என்பதற்காக தனது நாக்கை இரண்டாக வெட்டி அதையும் பச்சை நிறத்திற்கு மாற்றியிருக்கிறார்.
மேலும் வெள்ளையாக இருக்கும் தனது கண்களை கருப்பு மைக்கொண்டு பச்சைக்குத்தி அதன் நிறத்தையும் மாற்றியிருக்கிறார். இதனால் 26 வயதான அந்த இளைஞர் பார்ப்பதற்கே விசித்திரமாக இருக்கிறார்.
ஆனால் இதுகுறித்துப் பேசிய அந்த இளைஞர் எனது சிறுவயதில் இருந்தே என்னுடைய முகத்தில் மாற்றங்களை செய்துகொள்ளவேண்டும் என விரும்பினேன். தற்போது 12 லட்சங்களைச் செலவு செய்து முகத்தை மாற்றியிருக்கிறேன். ஆனால் இந்த மாற்றங்கள் எனக்குப் போதுமான மனத்திருப்தியைத் தரவில்லை. எனவே எதிர்காலத்தில் உடல் அமைப்பையும் மாற்ற முயற்சிப்பேன் எனத் தெரிவித்துள்ளார். இந்த விசித்திரச் சம்பவம் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Kiara Nithya
Contact at support@indiaglitz.com
Comments