ஆபத்தான பொசிஷன்… விபரீத ஆசையில் ஆண் உறுப்பை உடைத்துக் கொண்ட இளைஞர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்தோனேசியாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது பார்னருடன் உடலுறவு மேற்கொண்டபோது ஆணுறுப்பு முறிவு ஏற்பட்டு சிகிச்சை மேற்கொண்டுள்ளார். இந்தத் தகவலை அடுத்து மருத்துவர்கள் பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டு வருகின்றனர்.
இன்தோனேசியாவை சேர்ந்த 37 வயதான இளைஞர் ஒருவர் தனது தோழியுடன் வித்தியாசமான முறையில் உறவுகொள்ள ஆசைப்பட்டு ரிவர்ஸ் கௌகேர்ள் (Reverse cowgirl) எனும் நிலையில் உடலுறவு மேற்கொண்டுள்ளார். அப்போது ஆண் உறுப்பில் உடைந்தது போல வளைவு ஏற்பட்டிருக்கிறது. மேலும் திடீரென்று பயங்கர வலியை உணர்ந்த அவர் விரைப்பு தன்மையை இழந்திருக்கிறார். கூடவே ஆணுறுப்பில் இருந்து ரத்தம் கசிவதைப் பார்த்துள்ளார். இதனால் சிறுநீர் கழிக்க முடியாமல் சிரமபட்ட அவர் உடனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து இளைஞரை பரிசோதித்த மருத்துவர்கள் ஆணுறுப்பில் முறிவு ஏற்பட்டுள்ளதாகக் கூறியுள்ளனர்.
தொடர்ந்து இளைஞருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்தனர். 3 நாள் தீவிர சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பிய அந்த இளைஞர் தற்போது சிறுநீர் கழிப்பதிலோ அல்லது விரைப்பு தன்மை ஏற்படுவதிலோ எந்தப் பிரச்சனையும் இல்லை என்று கூறியுள்ளார். ஆனால் ஆணுறுப்பு வளைந்து முறிவு ஏற்பட்ட இந்த இளைஞரைத் தொடர்ந்து மருத்துவர்கள் பலரும் தங்களது கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர்.
அதாவது Urology எனும் மருத்துவ ஆய்விதழ் வெளியிட்டுள்ள கட்டுரையில் உடலுறவின்போது ஏற்படும் மன எழுச்சி காரணமாக சில நேரங்களில் ஒழுங்கற்ற செயல்பாடுகளினால் இதுபோன்ற முறிவுகள் ஏற்படுவதாகக் கூறியுள்ளனர். உண்மையில் ஆணுறுப்பில் எலும்புகள் இல்லாவிட்டாலும் உடலில் இணைந்துள்ள அந்தரங்க எலும்பு பகுதிகளுக்கு அழுத்தம் கொடுக்கும்போது ஆணுறுப்பில் உள்ள சிறிய ஃபாலிக் எலும்புகளுக்கும் முறிவு ஏற்படுகிறது. இதனால் உறுப்பில் வளைவு ஏற்பட்டு அதிலுள்ள இரத்த நாளச் சுவர்களில் காயங்கள் ஏற்படுகின்றன. திசுக்களும் பலமாக சேதமடைகிறது. மேலும் இதுபோன்ற ஆணுறுப்பு முறிவுகள் ஆபத்தான உறவுநிலைகளில் மட்டுமே ஏற்படுகின்றன என்றும் கூறியுள்ளனர்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து கருத்து வெளியிட்டுள்ள சில மருத்துவர்கள் Reverse cowgirl உறவுநிலை மிகவும் ஆபத்தானது என்றும் ஆணுறுப்பு முறிவு விபத்துகளில் 50% இதனால் ஏற்படுவதாகவும் கூறியுள்ளனர். கடந்த 2017 இல் Journal of impotence research வெளியிட்ட ஒரு அறிக்கையில் டாகி ஸ்டைல் மிகவும் ஆபத்தானது எனக்கூறப்பட்டு இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments