close
Choose your channels

அஜித்தை அட்டகாசமாக மாற்றிய ஃபிட்னெஸ் பயிற்சியாளர் யார் தெரியுமா?

Thursday, February 2, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் நடித்த 'வேதாளம்' படப்பிடிப்பின் கடைசி நாளில் அவருக்கு காலில் அடிபட்டதால் அந்த வலியோடு அந்த படப்பிடிப்பை முடித்து கொடுத்தார். அதன் பின்னர் அறுவை சிகிச்சை செய்து சில மாதங்கள் முழு ஓய்வில் இருந்த அஜித்தின் உடல் எடையும் கொஞ்சம் அதிகரித்திருந்தது.

ஆனால் 'விவேகம்' படத்தில் அவர் ஒர் சர்வதேச போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிப்பதால் அவரது உடல் எடையை முற்றிலும் மாற்றும் பொறுப்பை இயக்குனர் சிறுத்தை சிவா 'யூசூப்' என்ற பிட்னெஸ் பயிற்சியாளரிடம் ஒப்படைத்தார். அவருடைய தீவிரமான முயற்சி, அஜித் அவருக்கு கொடுத்த அபாரமான ஒத்துழைப்பின் அடையாளமே இன்று நீங்கள் பார்க்கும் அட்டகாசமான அஜித்தின் 'விவேகம்' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் தோற்றம்.

இந்நிலையில் இதுகுறித்து ஃபிட்னெஸ் பயிற்சியாளர் யூசூப் தனது சமூக வலைத்தளத்தில் கூறுகையில், 'அஜித்தின் உடல்தகுதி மாற்றும் பயணத்தில் நானும் உடன் இருந்தேன் என்று கூறுவதில் எனக்கு பெருமை. மேலும் 'விவேகம்' படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரில் எனது பெயரை போட்டு எனக்கு மரியாதை கொடுத்த இயக்குனர் சிவாவுக்கும் படக்குழுவினர்களுக்கும் எனது நன்றிகள்' என்று கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment