close
Choose your channels

செங்குத்தாக உடைந்த ஆணுறுப்பு… உலகிலேயே முதல்முறையாக நடந்த விபரீதம்!

Tuesday, July 27, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com


இங்கிலாந்தைச் சார்ந்த 40 வயது ஆண் ஒருவருக்கு பாலியல் உறவில் ஈடுபட்டபோது அவருடைய ஆணுறுப்பு செங்குத்தாக உடைந்துள்ளது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து கிடைமட்டமாக ஆணுறுப்பு உடையும் நிகழ்வு உலகம் முழுவதும் சாதாரணமாக நடைபெற்று வருகிறது. ஆனால் உலகிலேயே முதல் முறையாக செங்குத்து வாக்கில் இப்படி உடைந்து இருக்கிறது என மருத்துவர்கள் அதிர்ச்சியை வெளியிட்டு உள்ளனர்.

சமீபத்தில் இங்கிலாந்தைச் சேர்ந்த 40 வயது ஆண் ஒருவர் தன்னுடைய துணையுடன் பாலியல் உறவில் ஈடுபட்டு உள்ளார். அப்போது அவருடைய ஆணுறுப்பு செங்குத்தாக உடைந்து இருக்கிறது. முதலில் இதுகுறித்து அறியாத அந்த நபர், ஆணுறுப்பில் வீக்கம் ஏற்பட்டத்தைத் தொடர்ந்து மருத்துவமனைக்கு வந்துள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் செங்குத்தாக அதுவும் துணி அல்புகினியா(tunica Albuginea) எனப்படும் மையத்தில் இருந்து வலப்பக்கம் 3 செ.மீ அளவிற்கு சதை கிழிந்து இருப்பதை உறுதிப்படுத்தினர்.

இதற்காக பலமுறை எம்.ஐ.ஆர் ஸ்கேன் செய்யப்பட்டு அவருடைய ஆணுறுப்பு செங்குத்தாக உடைந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு முன்பு இங்கிலாந்தில் பல ஆண்களுக்கு கிடைமட்டமாக ஆணுறுப்பு உடைந்து இருக்கிறது. இதற்காக பல சிகிச்சைகளும் செய்யப்பட்டு இருக்கின்றன. ஆனால் உலகிலேயே முதல்முறையாக, செங்குத்தாக ஒருவருக்கு ஆணுறுப்பு கிழிந்து இருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

பொதுவா எலும்புகளே இல்லாத ஒரு உறுப்புதான் இந்த ஆணுறுப்பு. இதனால் ஆணுறுப்பு உடைவது என்பது அரிதாகவே நடக்கிறது. அப்படி நடந்தாலும் கிடைமட்டமாக பலருக்கு உடைந்து போகிறது. இதற்கான சிகிச்சை எடுத்துக்கொள்ளும்போது அந்த நபர் குணமடைந்து மீண்டும் இயல்பாக குடும்ப வாழ்க்கையில் ஈடுபடுவார்.

ஆனால் தற்போது செங்குத்தாக ஒரு நபருக்கு ஆணுறுப்பு உடைந்து இருக்கிறது. இதற்காக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் 6 மாதங்கள் கழித்து அவர் இயல்பான பாலியல் உறவைத் தொடங்கலாம் எனவும் முன்பு இருந்தவாறே விந்து வெளியேற்றம் அவருடைய உறுப்பில் நடைபெறும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.
ஆனால் உலகிலேயே செங்குத்தாக ஆணுறுப்பு உடைந்து இருப்பது குறித்து அதிர்ச்சி வெளியிட்ட மருத்துவர்கள், இது மருத்துவ உலகம் சந்தித்த முதல் சிக்கலான விஷயம் என்பதையும் குறிப்பிட்டு காட்டியுள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment