விவாகரத்தான மனைவி நண்பருடன் தொடர்பு: கணவன் எடுத்த அதிர்ச்சி முடிவு
Send us your feedback to audioarticles@vaarta.com
விவாகரத்து ஆன மனைவி தனது நண்பருடன் தொடர்பில் இருப்பதை அறிந்த கணவர், அந்த பெண்ணை கொலை செய்துவிட்டு, இரண்டு வருடங்களாக நாடகமாடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை அருகே ராஜா என்பவருக்கும் சரண்யா என்பவருக்கும் இடையே கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் இருந்த நிலையில் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். இந்த நிலையில் ராஜா, கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் தன்னுடைய நண்பர்களுடன் மது போதையில் இருந்தபோது நண்பர்களில் ஒருவர் விவாகரத்தான சரண்யா தன்னுடன் தொடர்பில் இருப்பதாக போதையில் உளறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜா, சரண்யாவை கொலை செய்தால் ஒரு லட்ச ரூபாய் தருவதாக நண்பர்களுக்கு வாக்குறுதி அளித்தார். அதனை அடுத்து நண்பர்கள் சேர்ந்து சரண்யாவை கொலை செய்து காட்டுப்பகுதியில் புதைத்துவிட்டனர்.
இந்த நிலையில் சரண்யாவை காணவில்லை என அவரது தந்தை கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் அவரை தேடி வந்தனர். ஆனால் போலீசாரால் கண்டுபிடிக்க முடியாத நிலையில் சிபிசிஐடி இந்த வழக்கை எடுத்து நடத்திய போது சரண்யாவின் முன்னாள் கணவர் ராஜா தான் சரண்யாவின் மறைவுக்கு காரணமாக இருக்கலாம் என்பதை கண்டுபிடித்தனர்.
பின்னர் அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை செய்தபோது தன்னுடைய நண்பர்களின் உதவியால் கொலை செய்ததை ராஜா ஒப்புக்கொண்டார். இதனையடுத்து ராஜாவும் அவருடைய நண்பரும் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் இருவரை போலீசார் தேடி வருகின்றனர். விவாகரத்தான மனைவியை கொலை செய்துவிட்டு இரண்டு ஆண்டுகளாக அதை மறைத்து நாடகமாடிய கணவன் கைது செய்யப்பட்டிருப்பது தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout