ஆஸ்கார் விருது வாங்கிய ஒருசில நிமிடங்களில் நடிகைக்கு ஏற்பட்ட சோகம்
Send us your feedback to audioarticles@vaarta.com
நேற்று அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கோலாகலமாக நடைபெற்ற ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் சிறந்த நடிகையாக திரி பில்போர்ட்ஸ் அவுட்சைட் எப்பிங், மிசோரி என்ற படத்தில் சிறப்பாக நடித்த Frances McDormand என்பவர் தேர்தெடுக்கப்பட்டு அவருக்கு விருது அளிக்கப்பட்டது. இந்த விருது தன் வாழ்நாள் கனவு என்று அவர் கூறி மகிழ்ச்சியில் உச்சத்தில் இருந்தார்.
இந்த நிலையில் விருது வழங்கும் விழா முடிந்ததும் நடந்த பார்ட்டியில் ந்டிகை Frances McDormand கலந்து கொண்டார். இந்த பார்ட்டி நடந்து கொண்டிருந்தபோது திடீரென அவரது விருதை காணவில்லை. இதனால் அவர் அதிர்ச்சி அடைந்தார். அவரது கண்களில் கண்ணீரும் எட்டிப்பார்த்தது
இந்த நிலையில் இதுகுறித்து விழாக்குழுவினர் காவல்துறையினர்களிடம் புகார் கொடுத்தனர். இதுகுறித்து விசாரணை செய்த போலீஸார் ';இது எனக்கு கிடைத்த விருது' என்று போதையில் உளறிக்கொண்டிருந்த 47 வயது டெர்ரி பிரையண்ட் என்பவரிடம் போலீசார் சந்தேகத்தின் பேரில் விசாரித்தனர். அப்போது அவர் அந்த விருதை நடிகையிடம் இருந்து திருடியதை ஒப்புக்கொண்டதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார். பின்னர் அந்த விருதை நடிகையிடம் காவல்துறையினர் ஒப்ப்டைத்தனர். கைது செய்யப்பட்ட டெர்ரி பிரையண்ட் சமையல் குறிப்புகள் எழுத்தாளர் என்பது விசாரணையில் தெரியவந்தது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments