போதும் நிறுத்திக்கிடலாம்: கள்ளக்காதலை முடிவுக்கு கொண்டு வர முயன்ற பெண் படுகொலை!

  • IndiaGlitz, [Thursday,April 11 2019]

இத்தனை ஆண்டுகள் இருந்த கள்ளக்காதல் போதும், இத்தோடு நிறுத்திவிடலாம் என்று கூறிய கள்ளக்காதலியை, கள்ளக்காதலன் சரமாரியாக அரிவாளால் வெட்டி கொலை செய்த சம்பவம் உளுந்தூர்பேட்டை அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

உளுந்தூர்பேட்டை அருகே சிறுவத்தூர் என்ற பகுதியை சேர்ந்த 40 வயது விதவைப்பெண் கொடிபவுனுக்கும் அதே பகுதியை சேர்ந்த 32 வயது ராமு என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளாக கள்ளக்காதல் இருந்துள்ளது. இந்த நிலையில் கொடிபவுனின் இரண்டு மகள்களும் விவரம் தெரியும் வயது ஆகிவிட்டதால் கள்ளக்காதலை இத்துடன் நிறுத்தி கொள்ளலாம், இனிமேல் எனது வீட்டுக்கு வராதே என்று கொடிபவுனு ராமுவிடம் கூறியுள்ளார்.

இதனால் ராமு ஆத்திரம் அடைந்தாலும், கொடிபவுனை சமாதானப்படுத்த முயன்றுள்ளார். ஆனால் மகள்களுக்கு இந்த விஷயம் தெரிந்துவிட்டால் அசிங்கப்பட நேரிடும் என்பதால் கொடிபவுனு தொடர்ந்து மறுத்துள்ளார். இந்த நிலையில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த ராமு, கொடிபவுனுவை அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பியோடினார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை செய்தனர். தப்பியோடிய கொலையாளி ராமுவையும் மூன்றே மணி நேரத்தில் பிடித்து கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது