2வது மனைவியின் முதல் கணவருக்கு பிறந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவர் கைது!

  • IndiaGlitz, [Friday,November 22 2019]

திருவாரூரில் பகுதியில் 2வது மனைவியின் முதல் கணவருக்கு பிறந்த 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவர் போக்சோ சட்டத்தில் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

திருவாரூர் மாவட்டம் இலவங்கார்குடி என்ற கிராமத்தைச் சேர்ந்த 35 வயது சின்னப்பா என்பவருக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் சித்ரா என்ற பெண்ணை 2வதாக திருமணம் செய்தார்.. சித்ராவிற்கு ஏற்கனவே திருமணமாகி 17 வயதில் பெண் குழந்தை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சித்ராவின் 17 வயது மகளை நேற்று வீட்டில் யாரும் இல்லாத நிலையில் சின்னப்பா பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் இதனால் மனமுடைந்த அந்த சிறுமி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதாகவும் தெரிகிறது. இதுகுறித்து திருவாரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் சின்னப்பாவை கைது செய்த போலீசார் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து திருவாரூர் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அதன்பின்னர் நீதிபதியின் உத்தரவின் சின்னப்பா திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

More News

தினமும் 12 மாத்திரைகள் சாப்பிட்ட விஜய் பட நாயகி!

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்த நடிகை இலியானா, ஷங்கர் இயக்கத்தில் விஜய் நடித்த 'நண்பன்' திரைப்படத்தில் நாயகியாக நடித்தவர் என்பது தெரிந்ததே.

'தலைவி' படத்தில் நடிக்க மறுத்த பிரபல ஹீரோ!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை ஒரே நேரத்தில் 3 இயக்குனர்கள் இயக்கி வருகின்றனர் என்பது தெரிந்ததே. அவற்றில் ஒன்று இயக்குனர் ஏஎல் விஜய் இயக்கி வரும் 'தலைவி'

பள்ளி மாணவியை கடித்த பாம்பு! ஆசிரியர்கள் அலட்சியத்தால் பறிபோன உயிர்!

10 வயது பள்ளிச் சிறுமியை பாம்பு கடித்த நிலையில் ஆசிரியர்களின் அலட்சியத்தால் அந்த சிறுமி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் கேரளாவில் நடைபெற்றுள்ளது 

அக்னி சிறகுகள்' அக்சராஹாசனின் கேரக்டர் அறிவிப்பு

உலக நாயகன் கமலஹாசனின் மகளும் நடிகையுமான அக்சராஹாசன் அஜித்தின் 'விவேகம்' மற்றும் விக்ரமின் 'கடாரம் கொண்டான்' ஆகிய திரைப்படங்களில் நடித்த நிலையில்

ரஜினியின் அதிசயம்-அற்புதம் பேட்டிக்கு முதல்வரின் உடனடி ரியாக்சன்

கோவாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் கோல்டன் ஐகான் விருதை பெற்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சற்றுமுன் சென்னை திரும்பினார்.