பூட்டிய வீட்டிற்குள் ஆணும் பெண்ணும் இருப்பது தவறா? சென்னை உயர்நீதிமன்றம் விளக்கம்!

  • IndiaGlitz, [Friday,February 05 2021]

பூட்டிய வீட்டிற்குள் ஒரு ஆணும் பெண்ணும் தனியாக இருந்தால் அதைத் தவறாக எடுத்துக் கொள்ள முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கி இருக்கிறது. கடந்த 23 ஆண்டுகளுக்கு முன்னர் தொடரப்பட்ட ஒரு வழக்கில் தீர்ப்பு வழங்கிய சென்னை உயர்நீதிமன்றம் பூட்டிய வீட்டிற்குள் அல்லது அறைக்குள் ஒரு ஆணும் பெண்ணும் தனியாக இருந்தார்கள் என்பதற்காக அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்காவோ அல்லது சமூகத்தில் வேறு விதமாக கருத்து நிலவுகிறது என்பதற்காக அவர்களை வேலையில் இருந்து நீக்கவோ முடியாது எனத் தீர்ப்பு வழங்கி இருக்கிறது.

கடந்த 1997 ஆம் ஆண்டு ஆயுதப்படை காவல் துறையில் பணியாற்றிய காவலர் சரவணபாபு என்பவரின் வீட்டிற்குள் தன்னுடைய வீட்டின் சாவியைக் கேட்டு பெண் காவலர் ஒருவர் சென்று இருக்கிறார். இதை பார்த்த பொதுமக்கள் இருவரும் தவறான உறவில் இருக்கிறார்கள் எனக் கருதி வெளியில் இருந்து கதவைப் பூட்டியதோடு அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை வைத்தனர். இதை விசாரித்த ஆயுதப்படை ஐஜி சரவணபாபுவை பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்து இருக்கிறார்.

இதையடுத்து கடந்த 1998 ஆம் ஆண்டு சரவணபாபு தன்மீது எந்தக் குற்றமும் இல்லை எனவும் மீண்டும் பணியில் சேர்த்துக் கொள்ளுமாறும் மனு ஒன்றை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்து இருந்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார் ஒரு வீட்டில் ஆணும் பெண்ணும் தனியாக இருந்தார்கள் அல்லது மூடிய அறைக்குள் தனியாக இருந்தார்கள் என்பதை விபச்சாரமாக கருத முடியாது. மேலும் பூட்டிய அறைக்குள் இருந்தக் காரணத்தினாலேயே தவறு செய்து விட்டார்கள் என ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் முடியாது. எனவே சரவணபாபுவை மீண்டும் பணியில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என காவல் துறைக்கு உத்தரவிட்டு பரபரப்பு தீர்ப்பு வழங்கினார்.

இதற்கு முன்பும் பூட்டிய வீட்டிற்குள் ஆணும் பெண்ணும் இருப்பதைத் தவறாக கருத முடியாது என சென்னை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது. என்றாலும் 23 ஆண்டுகால போராட்டம் தற்போது முடிவுக்கு வந்து இருப்பது குறித்து இந்த வழக்கு வித்தியாசமாகப் பார்க்கப்பட்டு வருகிறது.

More News

உரிமைக்களுக்காக போராடுவதும் ஜனநாயகம்தான்: பிரபல தமிழ் ஹீரோ

டெல்லியில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வரும் வடமாநில விவசாயிகளுக்கு ஆதரவாக இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன 

வெளிநாட்டு பிரபலங்களுக்கு ஆதரவாக கருத்து கூறிய ரஜினி பட நாயகி!

மத்திய அரசின் புதிய வேளாண் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் இந்த போராட்டம் குறித்து வெளிநாட்டு பிரபலங்கள் குரல் கொடுத்ததால் பெரும் பரபரப்பு . 

மாப்பிள்ளை யார்? திருமணம் குறித்து மனம் திறந்த விஜே ஜாக்லின்!

'கலக்கப்போவது யாரு' என்ற நிகழ்ச்சியை ரக்சனுடன் இணைந்து தொகுத்து வழங்கிய ஜாக்லின் தற்போது 'தேன்மொழி' என்ற தொலைக்காட்சித் தொடரில் நடித்து வருகிறார்

பிக்பாஸ் சுரேஷ் வீட்டிற்கு சென்ற போட்டியாளர்கள்: மிஸ் ஆனவர்கள் யார் யார் தெரியுமா?

பிக்பாஸ் நிகழ்ச்சி சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் இந்த நிகழ்ச்சியில் ஆரி வெற்றியாளராகவும், பாலாஜி இரண்டாம் இடத்தையும் பிடித்தனர் என்பது தெரிந்ததே.

விஜே ரக்சனின் வேற லெவல் போட்டோஷூட்: வீடியோ

'கலக்கப்போவது யாரு' என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய ரக்சன் தற்போது 'குக் வித் கோமாளி' என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார் என்பதும்