பூட்டிய வீட்டிற்குள் ஆணும் பெண்ணும் இருப்பது தவறா? சென்னை உயர்நீதிமன்றம் விளக்கம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பூட்டிய வீட்டிற்குள் ஒரு ஆணும் பெண்ணும் தனியாக இருந்தால் அதைத் தவறாக எடுத்துக் கொள்ள முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கி இருக்கிறது. கடந்த 23 ஆண்டுகளுக்கு முன்னர் தொடரப்பட்ட ஒரு வழக்கில் தீர்ப்பு வழங்கிய சென்னை உயர்நீதிமன்றம் பூட்டிய வீட்டிற்குள் அல்லது அறைக்குள் ஒரு ஆணும் பெண்ணும் தனியாக இருந்தார்கள் என்பதற்காக அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்காவோ அல்லது சமூகத்தில் வேறு விதமாக கருத்து நிலவுகிறது என்பதற்காக அவர்களை வேலையில் இருந்து நீக்கவோ முடியாது எனத் தீர்ப்பு வழங்கி இருக்கிறது.
கடந்த 1997 ஆம் ஆண்டு ஆயுதப்படை காவல் துறையில் பணியாற்றிய காவலர் சரவணபாபு என்பவரின் வீட்டிற்குள் தன்னுடைய வீட்டின் சாவியைக் கேட்டு பெண் காவலர் ஒருவர் சென்று இருக்கிறார். இதை பார்த்த பொதுமக்கள் இருவரும் தவறான உறவில் இருக்கிறார்கள் எனக் கருதி வெளியில் இருந்து கதவைப் பூட்டியதோடு அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை வைத்தனர். இதை விசாரித்த ஆயுதப்படை ஐஜி சரவணபாபுவை பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்து இருக்கிறார்.
இதையடுத்து கடந்த 1998 ஆம் ஆண்டு சரவணபாபு தன்மீது எந்தக் குற்றமும் இல்லை எனவும் மீண்டும் பணியில் சேர்த்துக் கொள்ளுமாறும் மனு ஒன்றை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்து இருந்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார் ஒரு வீட்டில் ஆணும் பெண்ணும் தனியாக இருந்தார்கள் அல்லது மூடிய அறைக்குள் தனியாக இருந்தார்கள் என்பதை விபச்சாரமாக கருத முடியாது. மேலும் பூட்டிய அறைக்குள் இருந்தக் காரணத்தினாலேயே தவறு செய்து விட்டார்கள் என ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் முடியாது. எனவே சரவணபாபுவை மீண்டும் பணியில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என காவல் துறைக்கு உத்தரவிட்டு பரபரப்பு தீர்ப்பு வழங்கினார்.
இதற்கு முன்பும் பூட்டிய வீட்டிற்குள் ஆணும் பெண்ணும் இருப்பதைத் தவறாக கருத முடியாது என சென்னை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது. என்றாலும் 23 ஆண்டுகால போராட்டம் தற்போது முடிவுக்கு வந்து இருப்பது குறித்து இந்த வழக்கு வித்தியாசமாகப் பார்க்கப்பட்டு வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments