close
Choose your channels

ஊமை விழிகள் 2: 7 வருடங்களுக்கு பின் ரீஎண்ட்ரி ஆகும் நடிகை

Tuesday, March 6, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த 1986ஆம் ஆண்டு ஆபாவாணன் இயக்கத்தில் விஜயகாந்த், சரிதா, கார்த்திக் நடித்த வெற்றி திரைப்படம் 'ஊமை விழிகள்'. இந்த நிலையில் தற்போது 'ஊமை விழிகள் 2' என்ற பெயரில் ஒரு திரைப்படம் உருவாகி வருகிறது. ஆனால் இந்த படத்திற்கும் ஊமை விழிகள் படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதும், இது ஒரு இரண்டாம் பாக திரைப்படம் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிரபுதேவா நாயகனாக நடிக்கும் இந்த படத்தை ஆகாஷ் சாம் என்பவர் இயக்கி வருகிறார். விஷ்ணு ராமகிருஷ்ணன் ஒளிப்பதிவில் சத்யா சூர்யா படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தில் நாயகியாக நடிக்க நடிகை மம்தா மோகன் தாஸ் ஒப்பந்தமாகியுள்ளார். இந்த தகவலை மம்தா தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார்.

மம்தா மோகன் தாஸ் கடைசியாக கடந்த 2012ஆம் ஆண்டு வெளிவந்த அருண்விஜய்யின் 'தடையற தாக்க' என்ற படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தகக்து. இந்த படத்திற்கு பின்னர் அவர் மலையாளத்தில் பிசியாகியுள்ள நிலையில் தற்போது 'ஊமை விழிகள் 2' படத்தில் நடிக்கவுள்ளார். மேலும் பார்த்திபனின் 'உள்ளே வெளியே 2' படத்திலும் இவர்தான் நாயகி என்று கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment