வில்லனாக நடிக்கும் மம்முட்டி.. ஹீரோவாக நடிக்கும் 'ஜெயிலர்' வில்லன்.. ஆச்சரிய தகவல்..!

  • IndiaGlitz, [Sunday,September 22 2024]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் வில்லனாக நடித்தவர், ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்க இருக்கும் நிலையில், அந்த படத்தில் வில்லனாக மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி நடிக்க இருப்பதாக வெளியான தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல மலையாள நடிகர் மம்முட்டி, திரைப்படங்களில் நடிப்பது மட்டுமின்றி சில திரைப்படங்களை தயாரித்து வருகிறார் என்பது தெரிந்தது. அந்த வகையில், மம்முட்டியின் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படத்தில் ஹீரோவாக பிரித்விராஜ் நடிப்பதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால், அவரால் நடிக்க முடியவில்லை.

இந்த நிலையில், தற்போது இந்த படத்தின் ஹீரோவாக விநாயகன் நடிக்கவுள்ளார். இவர் ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் வில்லனாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை ஜோஸ் என்ற அறிமுக இயக்குநர் இயக்க இருக்க, இந்த படத்தின் படப்பிடிப்பு நாகர்கோவிலில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், தற்போது தயாரிப்பாளரான மம்முட்டி வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. வில்லன் நடிகர் ஆன விநாயகன் ஹீரோவாகவும், ஹீரோ நடிக்கும் மம்முட்டி வில்லனாகவும் நடிக்க இருப்பதால், மலையாள திரை உலகமே இந்த படத்தை ஆச்சரியத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.