'தளபதி' சூர்யா விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்த தேவா!
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சமீபத்தில் உடல்நலக் கோளாறு காரணமாக ஐதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்பது தெரிந்ததே. ரஜினிக்கு ரத்த அழுத்தத்தில் மாறுபாடு இருப்பதாகவும் அதற்காக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அனேகமாக இன்று மாலை அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டு வருகிறது
இந்த நிலையில் ரஜினிக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், திரை உலக பிரமுகர்கள் விரைவில் அவர் குணமாக வேண்டும் என்று வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் ரஜினியுடன் ’தளபதி’ என்ற படத்தில் நடித்த மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்
மம்முட்டி தனது டுவிட்டில் ’சூர்யா விரைவில் குணமடைய அன்புடன் வாழ்த்தும் தேவா’ என்று குறிப்பிட்டுள்ளார். ’தளபதி’ திரைப்படத்தில் ரஜினிகாந்த் ’சூர்யா’ என்ற கேரக்டரிலும், மம்முட்டி ‘தேவா’ என்ற கேரக்டரிலும், நடித்தார்கள் என்பதும் அதனை குறிப்பிடும் வகையிலேயே மம்முட்டி தனது டுவிட்டர் பக்கத்தில் ரஜினிக்கு இவ்வாறு வாழ்த்து தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது
Get well soon Soorya
— Mammootty (@mammukka) December 26, 2020
Anpudan Deva pic.twitter.com/r54tXG7dR9
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments