மம்முட்டி - கெளதம் மேனன் படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்..
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல மலையாள நடிகர் மம்முட்டி நடிப்பில், கௌதம் மேனன் இயக்கத்தில் ஒரு திரைப்படம் உருவாகி வருவதாக கூறப்பட்ட நிலையில் இன்று விநாயகர் சதுர்த்தி தினத்தை முன்னிட்டு இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய பர்ஸ்ட் போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றன.
தமிழ் திரை உலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான கௌதம் மேனன் முதல் முறையாக ஒரு மலையாள படத்தை இயக்க இருக்கும் நிலையில் இந்த படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி நடிக்க இருப்பதாகவும் அவரே இந்த படத்தை தயாரிக்க இருப்பதாகவும் கடந்து சில மாதங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது.
சமீபத்தில் கொச்சியில் இந்த படத்தின் பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் தற்போது இந்த படத்தின் பர்ஸ்ட் போஸ்டர் வெளியாகி உள்ளது. இதில் இந்த படத்திற்கு டைட்டில் ஆக ’டொமினிக்’ என்று வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
காதல் மற்றும் ஆக்ஷன் கலந்த கதையம்சம் கொண்ட இந்த படத்தில் மம்முட்டி காவல்துறை அதிகாரியாக நடித்திருப்பதாகவும், சமந்தா இந்த படத்தில் நாயகியாக நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரே அசத்தலாக இருக்கும் நிலையில் நிச்சயம் இந்த படம் சூப்பர் ஹிட் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Presenting the First Look Poster of Dominic and The Ladies' purse , Directed by @menongautham & Produced by @MKampanyOffl pic.twitter.com/DQdbxbUhYC
— Mammootty (@mammukka) September 7, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments