மம்முட்டி - கெளதம் மேனன் படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்..

  • IndiaGlitz, [Saturday,September 07 2024]

பிரபல மலையாள நடிகர் மம்முட்டி நடிப்பில், கௌதம் மேனன் இயக்கத்தில் ஒரு திரைப்படம் உருவாகி வருவதாக கூறப்பட்ட நிலையில் இன்று விநாயகர் சதுர்த்தி தினத்தை முன்னிட்டு இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய பர்ஸ்ட் போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றன.

தமிழ் திரை உலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான கௌதம் மேனன் முதல் முறையாக ஒரு மலையாள படத்தை இயக்க இருக்கும் நிலையில் இந்த படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி நடிக்க இருப்பதாகவும் அவரே இந்த படத்தை தயாரிக்க இருப்பதாகவும் கடந்து சில மாதங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது.

சமீபத்தில் கொச்சியில் இந்த படத்தின் பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் தற்போது இந்த படத்தின் பர்ஸ்ட் போஸ்டர் வெளியாகி உள்ளது. இதில் இந்த படத்திற்கு டைட்டில் ஆக ’டொமினிக்’ என்று வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

காதல் மற்றும் ஆக்ஷன் கலந்த கதையம்சம் கொண்ட இந்த படத்தில் மம்முட்டி காவல்துறை அதிகாரியாக நடித்திருப்பதாகவும், சமந்தா இந்த படத்தில் நாயகியாக நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரே அசத்தலாக இருக்கும் நிலையில் நிச்சயம் இந்த படம் சூப்பர் ஹிட் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'வேட்டையன்': மாஸ் அறிவிப்பை வெளியிட்ட லைகா..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'வேட்டையன்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளன.

கமல்ஹாசனின் 'குணா' திரைப்பட ரீரிலீஸ் எப்போது? நீதிமன்றத்தின் முக்கிய அறிவிப்பு..!

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த 'குணா' திரைப்படத்தை ரீரிலீஸ் செய்ய நீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருந்த நிலையில் தற்போது அந்த தடை நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

சூர்யாவின் 27 ஆண்டுகால திரையுலக வாழ்க்கை.. சூப்பர் போஸ்டர் வெளியீடு..!

நடிகர் சூர்யா திரையுலகில் அறிமுகமாகி  27 ஆண்டுகள் ஆனதையடுத்து சூப்பர் போஸ்டர் ஒன்று வெளியாகியிருக்கும் நிலையில் இந்த போஸ்டரை சூர்யா ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

'கோட்' படத்தின் முதல் நாள் வசூல் எத்தனை கோடி? அர்ச்சனா கல்பாத்தி அறிவிப்பு..!

தளபதி விஜய் நடித்த 'கோட்' திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் சுமார் 5000 திரையரங்குகளில் வெளியான நிலையில் இந்த படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல்கள் இணையதளங்களில் கூறப்பட்டு வந்தன.

ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ்  'கோலி சோடா ரைசிங்'  வெப் சீரிஸ்.. ஸ்ட்ரீமிங் தேதி அறிவிப்பு..!

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், அதன் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் 'கோலி சோடா ரைசிங்' வெப் சீரிஸினை, செப்டம்பர் 13 ஆம் தேதி முதல்,