அல்போன்ஸ் புத்ரன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டாருடன் இணையும் அருண்விஜய்

  • IndiaGlitz, [Saturday,May 30 2020]

பிரபல மலையாள இயக்குநர் அல்போன்ஸ் புத்தரன் அவர்கள் இயக்கிய ‘நேரம்’ மற்றும் ’பிரேமம்’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் சூப்பர்ஹிட் வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. குறிப்பாக ‘பிரேமம்’ திரைப்படம் நாடு முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் ’பிரேமம்’ படத்தை இயக்கிய அல்போன்ஸ் புத்திரன் 5 ஆண்டுகள் கழித்து தற்போது அடுத்த படத்திற்கான பணியை தொடங்கி உள்ளார். இந்த புதிய படத்தை தமிழில் உருவாக்கவிருப்பதாகவும், அதில் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி மற்றும் அருண் விஜய் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தின் திரைக்கதையை தயார் நிலையில் இருப்பதாகவும் அவர் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்

மேலும் இந்த படத்திற்காக மிகப்பெரிய பட்ஜெட் தேவைப்படுவதால் இந்த படத்தை அடுத்த கட்டத்தில் நகர்த்த முடியாமல் சில மாதங்கள் இருந்ததாகவும், ஆனால் தற்போது இந்த படம் விரைவில் தொடங்க இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஊரடங்கு உத்தரவு முடிந்து இயல்பு நிலை திரும்பும் போது இந்த படத்தின் பணிகள் தொடங்கும் என்றும் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் கூறியுள்ளார். ஏற்கனவே தமிழில் பல வெற்றிப்படங்களை கொடுத்து வரும் அருண்விஜய், சூப்பர் ஸ்டார் மம்முட்டியுடன் இணைய இருப்பதால் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு கிடைக்கும் என்று கூறப்படுகிறது

More News

ஒரே நாளில் 938 பேர் கொரோனாவுக்கு பாதிப்பு: அதிர்ச்சி தகவல்

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது குறித்து சுகாதாரத்துறை தினந்தோறும் அறிவித்து வரும் நிலையில்

மீம்ஸ் கிரியேட்டர்களின் தலைவர்: வடிவேலுவை பாராட்டிய பிரபல காமெடி நடிகர்

கடந்த சில ஆண்டுகளாக சமூக வலைதளங்களில் மீம்ஸ்கள் வெளிவந்து கொண்டிருப்பது தெரிந்ததே. நாட்டில் எந்த ஒரு சம்பவம் நடந்தாலும் அந்த சம்பவத்தை மையமாக வைத்து ஊடகங்கள் சீரியஸாக செய்திகளை வெளியிட்டு

கொரோனா எதிரொலி: சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தில் புதிய வசதி

தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் வரும் ஜூன் 1 முதல் நிபந்தனைகளுடன் பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

குடிபோதையில் மதுபாட்டிலை உடலுக்குள் சொருகிய குடிகாரர்: டாக்டர்கள் அதிர்ச்சி

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்ததால் மதுக் கடைகளும் மூடப்பட்டு இருந்தது. மதுக்கடைகள் மூடப்பட்டு இருந்ததால்

அமெரிக்கா விண்கலம் நாளை பறக்க இருக்கிறது!!! இன்று SpaceX நிறுவனம் நடத்திய ஒரு ராக்கெட் சோதனையில் படுதோல்வி!!!

அமெரிக்கா விண்வெளித் துறையில் ஒரு பெரும் சாதனையாக நாளை 2 நாசா விண்வெளி வீரர்களை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்ப இருக்கிறது.