இந்த சூப்பர் ஸ்டார் நடிகருக்கு 70 வயதா? ரசிகர்களை ஆச்சர்யப்படுத்திய ஒரு புகைப்படம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
மலையாள சினிமாவில் சூப்பர் ஸ்டார் நடிகராக வலம்வரும் நடிகர் மம்முட்டி வெளியிட்ட ஒரு புகைப்படம் தற்போது இணையத்தில் தீயாய் பரவிவருகிறது. மேலும் இந்தப் புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் உண்மையில் நடிகர் மம்முட்டிக்கு 70 வயதாகிவிட்டதா? என ஆச்சர்யத்தை வெளிப்படுத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.
மலையாளத்தில் மெகா ஸ்டார் நடிகராக வலம்வரும் நடிகர் மம்முட்டி தனது நடிப்புத் திறமையால் உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்களைப் பெற்றிருக்கிறார். மேலும் இவருடைய நடிப்பைப் பாராட்டி இந்திய அரசு இதுவரை 4 தேசிய விருதுகளை வழங்கி கவுரவித்து இருக்கிறது. மேலும் 1998இல் “பத்மஸ்ரீ விருது“, 7 மாநில அரசு விருதுகள், 13 தென்னிந்திய ஃபிலிம்பேர் விருது என இந்திய சினிமா உலகில் ஒரு மைல்கல் சின்னமாக இருந்து வருகிறார்.
முகமது குட்டி இஸ்மாயில் என்ற பெயர் கொண்ட நடிகர் மம்முட்டி கடந்த 1951 செப்டம்பர் 7 ஆம் தேதி பிறந்தவர். மேலும் Thevara பகுதியில் உள்ள கல்லூரியில் பி.ஏ படிப்பை முடித்த இவர் கோட்டயம் மகாராஜா கல்லூரியில் “எல்எல்பி“ சட்டப் படிப்பை முடித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. பின்னாளில் சினிமா துறைக்கு வந்த இவர் கிட்டத்தட்ட 350 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முடித்திருக்கிறார். மேலும் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் எனப் பல மொழி திரைப்படங்களிலும் தனது தனி முத்திரையைப் பதித்துள்ளார்.
அந்த வகையில் தமிழ் சினிமாவில் “தளபதி“, “ஆனந்தம்“, “கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்“, “ஜுனியர் சீனியர்“ போன்ற திரைப்படங்களில் நடித்த மம்முட்டி கடைசியாக இயக்குநர் ராம் இயக்கத்தில் “பேரன்பு“ திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் 70வயதை எட்டியிருக்கும் இவர் தனது கல்லூரி காலத்து நண்பர்களைச் சந்திக்கும் வகையிலான ஒரு ரியூனைன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.
அந்த விழாவில் நடிகர் மம்முட்டி மகாராஜா கல்லூரியில் தன்னுடன் பயின்ற நண்பர்களைச் சந்தித்து அவர்களோடு ஒரு புகைப்படத்தையும் எடுத்துக் கொண்டுள்ளார். அந்த புகைப்படம்தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. காரணம் 70 வயதில் முதுமைத் ததும்பியிருக்கும் தனது நண்பர்களுக்கு மத்தியில் நடிகர் மம்முட்டி மட்டும் படு ஃபிட்டாக இருக்கிறார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Kiara Nithya
Contact at support@indiaglitz.com