குட்டி ரசிகைக்கு சர்ப்பிரைஸ் கொடுத்த மெகா ஸ்டார் நடிகர்… நெகிழ வைக்கும் புகைப்படம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
கேரளா மாநிலம் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி ஒருவர் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் அவரை நடிகர் மம்முட்டி நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய காட்சிகள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
நியாபக மறதி எனும் நோய் பெரும்பாலும் முதியவர்களுக்கே பாதிப்பை ஏற்படுத்துகிறது. சில நேரங்களில் இந்த நோயால் குழந்தைகளும் பாதிக்கப்பட்டு தங்களது வாழ்க்கையைத் தொலைத்துவிடும் அவலமும் நடக்கிறது. அந்தவகையில் நியாபக மறதி நோயால் பாதிக்கப்பட்டு கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஆராதிகா எனும் சிறுமி சிகிச்சை பெற்றுவருகிறார். அவரிடம் மருத்துவர்கள் பேச்சுக் கொடுத்தபோது எனக்கு நடிகர் மம்மட்டியை மிகவும் பிடிக்கும். நாளை எனது பிறந்தநாள். அவருடைய நியாபகங்கள் எனக்கு மறந்துபோவதற்கு முன்பாக அவரைப் பார்த்துவிட வேண்டும் என்று அன்பாக வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்த வீடியோ இணையத்தில் வைரலாகியது.
இதையடுத்து வேலை நிமித்தமாக கொச்சிக்கு வருகை தந்திருந்த நடிகர் மம்முட்டியை தொடர்புகொண்ட மருத்துவர்கள் ஆராதிகாவைப் பற்றி தெரிவித்துள்ளனர். இதனால் உடனடியாக நடிகர் மம்முட்டி தனியார் மருத்துவமனைக்குச் சென்று சிறுமி ஆராதிகாவைச் சந்தித்துள்ளார். மேலும் அவருடன் தனது நேரத்தை செலவிட்ட நடிகர் மம்முட்டி சிறுமிக்கு ஆறுதல் கூறியதோடு தேவையான உதவிகளை செய்வதாகவும் உறுதி அளித்திருந்தார்.
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக இருந்துவரும் நடிகர் மம்முட்டி தனது குட்டி ரசிகையின் ஆசையை நிறைவேற்றிய புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments