'காலா' படத்தில் வரும் 'பீம்ஜியும் சூப்பர் ஸ்டார் தானா?

  • IndiaGlitz, [Sunday,June 04 2017]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'காலா கரிகாலன்' படத்தின் படப்பிடிப்பு மும்பையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பா.ரஞ்சித் இயக்கி வரும் இந்த படத்தில் ரஜினி மும்பை டான் கேரக்டரில் நடிக்கின்றார் என்பதும் அவருக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி நடிக்கவுள்ளது குறித்தும் நாம் அறிந்ததே.

இந்த நிலையில் இந்த படத்தில் பீம்ஜி என்ற கேரக்டர் உள்ளது என்பதை சமீபத்தில் ஹூமா குரேஷி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட திரைக்கதை பேப்பரில் இருந்து தெரியவந்துள்ளது. சட்டமேதை அம்பேத்கருக்கு இன்னொரு பெயர் பீம்ஜி என்பதால் அவரது கேரக்டர் இந்த படத்தில் இருக்கலாம் என்று கருதப்பட்டது.

இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள புதிய தகவலின்படி பீம்ஜி கேரக்டரில் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 1991ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினியும், கேரள சூப்பர் ஸ்டார் மம்முட்டியும் இணைந்து நடித்த 'தளபதி' திரைப்படம் இன்றளவும் அனைவரும் விரும்பத்தக்க ஒரு படமாக இருக்கும் நிலையில் 25 வருடங்களுக்கு பின் மீண்டும் இரண்டு சூப்பர் ஸ்டார்களும் இணையவுள்ளதாக தெரிகிறது. இருப்பினும் இந்த கேரக்டர் குறித்து அதிகாரபூர்வ தகவல் படக்குழுவினர்களிடம் இருந்து வெளிவரும் வரை பொறுமை காப்போம்.

More News

தனுஷின் 'விஐபி 2' டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் என அனைத்து துறையிலும் வெற்றி பெற்று வரும் தனுஷ் நடிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள 'விஐபி 2' திரைப்படம் வரும் ரம்ஜான் திருநாளில் திரைக்கு வரவுள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் அட்டகாசமான டீசர் ரிலீஸ் தேதி தற்போது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது...

பாட்டுத் தலைவன் பாலசுப்பிரமணியம்: பிறந்த நாள் வாழ்த்துக்கள்

அரை நூற்றாண்டுகள், ஐந்து தலைமுறை இசையமைப்பாளர்கள், அண்டார்டிகா தவிர உலகம் முழுவதிலும் உள்ள அனைத்து நாடுகளுக்கும் இசைப்பயணம், என எஸ்பிபியின் சாதனைகள் இந்த 70 வயதிலும் தொடர்ந்து கொண்டே உள்ளது. எஸ்பிபி அவர்களின் சாதனை பயணம் இன்னும் மிக நீண்ட தூரம் செல்ல, இந்த இனிய பிறந்த நாளில் அவருக்கு மீண்டும் எங்களது பிறந்த நாள் வாழ்த்துக்கள

வாக்குக்கு விருதில்லை, வருகைக்கு தான் விருது: அரவிந்தசாமி

இன்றைய காலகட்டத்தில் பல தனியார் தொலைக்காட்சிகள், இணையதளங்கள், அமைப்புகள் ஆகியவை பல்வேறு விருதுகளை வழங்கும் விழாக்களை நடத்தி வருகின்றன...

'கோபம்' டைட்டில் ஏன்? சீமான் விளக்கம்

பிரபல இயக்குனர் சீமான் நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் திரையுலகில் ரீஎண்ட்ரி ஆகி இயக்கவுள்ள திரைப்படம் 'கோபம்'. கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் நாயகான நடிக்கவுள்ள இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விரைவில் தொடங்கவுள்ளது. வரும் அக்டோபர் மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறப்படுகிறது...

இயக்குனர் பாலாஜி மோகனின் சஸ்பென்ஸ் தகவல் இதுதான்

கடந்த சில மணி நேரத்திற்கு முன்பு 'மாரி' இயக்குனர் பாலாஜி மோகன் முக்கிய அறிவிப்பு ஒன்றை இன்று மாலை வெளியிடவுள்ளதாக தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்தார் என்பதை பார்த்தோம். 'மாரி 2' திரைக்கதையை அவர் எழுதி கொண்டிருப்பதால் இந்த தகவல் 'மாரி 2' குறித்ததாக இருக்கும் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டது...