மம்முட்டியுடன் இணையும் பிரபல தமிழ் ஹீரோ

  • IndiaGlitz, [Saturday,January 07 2017]

பிரபல மலையாள இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய 'பிரேமம்' கேரளாவில் மட்டுமின்றி தமிழகத்திலும் நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக சென்னையில் இந்த 200 நாட்கள் ஓடி சாதனை புரிந்தது. மேலும் இந்த படம் தெலுங்கிலும் ரீமேக் செய்யப்பட்டு ஹிட் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அல்போன்ஸ் புத்திரனின் அடுத்த படம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. இவரது அடுத்த படத்தில் இரண்டு ஹீரோக்கள் நடிக்கவுள்ளதாகவும் ஒருவர் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி என்றும் இன்னொருவர் கோலிவுட்டில் பிரபலமான ஹீரோ என்றும் இதுகுறித்த அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வெளிவரும் என்றும் செய்திகள் வெளிவந்துள்ளன.

தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளில் தயாராகும் இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகையர், தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்பட பல கோலிவுட் பிரபலங்களுடன் நடித்துள்ள மம்முட்டி, இம்முறை யாருடன் இணையவுள்ளார் என்பதை அறிய அனைவரும் ஆவலுடன் உள்ளனர்,.

More News

விஜய்சேதுபதியின் அடுத்த பட டைட்டில்

விஜய்சேதுபதி நடித்த 'புரியாத புதிரி' பொங்கல் திருநாள் விருந்தாக ஜனவரி 13ஆம் தேதி வெளிவரவுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய கேப்டன் அறிவிப்பு

இந்திய கிரிக்கெட் அணியின் 'தல' என்று கூறப்படும் தோனி சமீபத்தில் ஒருநாள் போட்டிகள் மற்றும் டி-20 போட்டிகளின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்ததும் அவரது கோடிக்கணக்கான ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

விஷால் சஸ்பெண்டை திரும்ப பெற முடியாது. தயாரிப்பாளர் சங்கம் அதிரடி

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு வரும் பிப்ரவரி 5ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

சசிகலா அக்கா மகனுக்கு ரூ.28 கோடி அபராதம். உறுதி செய்தது சென்னை ஐகோர்ட்

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த 1991ஆம் ஆண்டு முதல்வர் பதவியை முதன்முதலில் ஏற்றபோது அவருடைய தோழி சசிகலாவின் அக்கா மகன் டிடிவி தினகரனின் வங்கிக்கணக்கில் கோடிக்கணக்கில் முதலீடு இருந்ததாக கூறப்பட்டது.

ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா. சென்னை ஐகோர்ட் முக்கிய முடிவு

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று சமீபத்தில் நடந்த அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் இயற்றப்பட்டது.