ஜோதிகாவின் அடுத்த படத்திற்கு தடை விதிக்கப்பட்டதா? பரபரப்பு தகவல்..!

  • IndiaGlitz, [Tuesday,November 21 2023]

பிரபல நடிகர் மம்முட்டியுடன் ஜோதிகா நடித்த ’காதல் தி கோர்’ என்ற திரைப்படம் நாளை மறுநாள் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தை இரண்டு நாடுகளில் தடை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மம்முட்டி ஜோதிகா உள்பட பலர் நடிப்பில் உருவான ’காதல் தி கோர்’ என்ற திரைப்படம் நவம்பர் 23ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இந்த படத்தின் புரமோஷன் விழா விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் கத்தார் மற்றும் குவைத் ஆகிய இரு நாடுகள் ’காதல் தி கோர்’ படத்தை தடை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. இந்த படத்தின் கதை அம்சம் சர்ச்சைக்குரியதாக இருப்பதால் இந்த இரு நாடுகளிலும் தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இருப்பினும் மற்ற நாடுகளில் திட்டமிட்டபடி இந்த படம் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே ஒரு சில தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்கள் ஒரு சில அரபு நாடுகளில் தடை செய்யப்பட்ட நிலையில் தற்போது மம்முட்டி ஜோதிகா படத்திற்கும் அதே நிலை ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.