படப்பிடிப்பில் பாலா என்னை அடித்தாரா? ’வணங்கான்’ நடிகை கூறிய விளக்கம்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
இயக்குனர் பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்து வரும் ’வணங்கான்’ என்ற படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் மமிதா பைஜூ என்பவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் பாலா தன்னை அடித்துவிட்டார் என்று கூறியதாக செய்திகள் பரவிய நிலையில் இது குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்
நான் அந்த பேட்டியில் கூறிய ஒரு சிறிய பகுதியை மட்டும் வெட்டி எடுத்து வதந்திகளை பரப்பி உள்ளார்கள், அது முற்றிலும் உண்மை இல்லை என மமிதா பைஜூ தெரிவித்துள்ளார்
‘வணங்கான்’ படத்திற்காக நான் கிட்டத்தட்ட ஒரு வருடம் அந்த டீமிடம் பணி புரிந்துள்ளேன். பாலா உள்பட இயக்குனர் டீமில் உள்ள எல்லோரும் என் மீது மிகுந்த அக்கறை எடுத்துக் கொள்வார்கள், அவர்களுக்கும் எனக்கும் ஒரு நல்ல நட்பு பிணைப்பு இருந்தது.
பாலா சார் எனக்கு அதிக சுதந்திரம் கொடுத்தார், என்னுடைய நடிப்பு நன்றாக வர வேண்டும் என்று அதிக அக்கறை எடுத்துக் கொள்வார், அவர் என்னை ஒரு சிறந்த நடிகையாக மாற்ற எடுத்த முயற்சிகள் குறித்தும் அந்த பேட்டியில் நான் நிறைய கூறியுள்ளேன், ஆனால் அதெல்லாம் அந்த பேட்டியில் வரவில்லை.
பாலா சார் படப்பிடிப்பின்போது கொஞ்சம் ஸ்ட்ரிக்டாக இருப்பார் என்பது உண்மைதான். ஆனால் அதற்காக வதந்திகளில் கூறியபடி அவர் நடிகர் நடிகைகளை அடிக்க மாட்டார், ஒரு படம் நன்றாக வரவேண்டும் என்பதற்காக இயக்குனர் ஸ்ட்ரிக்டாக இருப்பதில் தவறு இல்லை, ஆனால் நான் கூறியதை நாம் முழுவதுமாக பேட்டியில் வெளியிடாமல் ஒரு சிறு பகுதியை மட்டும் வெட்டி ஒட்டி தேவையில்லாமல் வதந்தியை பரப்பி உள்ளனர் என்று நடிகை மமிதா பைஜூ விளக்கம் அளித்துள்ளார்.
பாலா சார் என்கிட்ட ஸ்ட்ரிட்டாலாம் இல்ல.. யாரோ தப்பா பாத்த வேலை இது... சூர்யா படத்துல இருந்து விலகுனதுக்கு இதுதான் காரணம் - வணங்கான் சர்ச்சைக்கு நடிகை மமிதா பைஜூ முற்றுப்புள்ளி#Vanangaan | #Bala | #ArunnVijay | #Surya | #MamithaBaiju | #PolimerNews pic.twitter.com/qlEe3ylgN1
— Polimer News (@polimernews) February 29, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com