மொபைல் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க முடியாது: முதல்வரின் அதிரடி முடிவு

  • IndiaGlitz, [Wednesday,October 25 2017]

மொபைல் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று மத்திய மாநில அரசுகள் நாடு முழுவதும் உள்ள மக்களிடம் வலியுறுத்தி வருகிறது. வரும் டிசம்பர் 31ஆம் தேதிக்குள் இந்த இணைப்பு நடைபெற வேண்டும் என்றும், அதன் பின்னர் மொபைல்-ஆதார் எண்களை இணைக்காதவர்களின் மொபைல் சேவை நிறுத்தப்படும் என்றும் கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இன்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தான் இதுவரை தன்னுடைய மொபைல் எண்ணில் ஆதார் எண்ணை இணைக்கவில்லை என்றும் இனிமேலும் இணைக்கும் எண்ணம் இல்லை என்றும் தெரிவித்தார். இதனால் தன்னுடைய மொபைல் சேவை நிறுத்தப்பட்டாலும் பரவாயில்லை என்றும் அவர் கூறியுள்ளார். இன்று கொல்கத்தாவில் நடைபெற்ற கட்சி நிர்வாகிகளிடம் பேசிய முதல்வர் மம்தா, தன்னை போலவே மக்கள் அனைவரும் மொபைல்-ஆதார் எண்களை இணைக்க வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

இந்த இணைப்பால் ஒவ்வொருவரின் தனிப்பட்ட ரகசியங்கள்  வெளியேற வாய்ப்பு இருப்பதாகவும் குறிப்பாக கணவன் - மனைவி உரையாடல் உள்பட பல தனிப்பட்ட விஷயங்கள் வெட்டவெளிச்சமாகிவிடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஒரு மாநிலத்தின் முதல்வரே மத்திய அரசின் திட்டத்தை எதிர்த்து குரல் கொடுத்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More News

விஜய் ரசிகர் மரணம்: நடிகர் அப்பானி ரவி கண்ணீர். .

தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படம் தமிழகத்தை போலவே கேரளாவிலும் கடந்த தீபாவளி அன்று வெளியாகி முன்னணி மலையாள நடிகர்களின் படங்களின் வசூலுக்கு இணணயான வசூலை பெற்றது.

சற்றுமுன் வெளியான தளபதி விஜய்யின் 'மெர்சல்' அறிக்கை

தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படம் இரண்டாவது வாரமாக வெற்றிகரமாக உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. இந்த படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பும், ரிலீஸ் ஆனதற்கு பின்பும் பல எதிர்ப்புகளை சந்தித்து வந்தாலும்

நெல்லை தீக்குளிப்பில் 4வது பலி: இசக்கிமுத்துவும் மரணம்

நெல்லையில் கந்துவட்டி கொடுமையால் பாதிக்கப்பட்ட இசக்கிமுத்து என்பவரின் குடும்பத்தினர் நான்கு பேர்களும், நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நேற்று முன் தினம் தீக்குளித்தனர்.

வரும் வெள்ளி முதல் மீண்டும் கெத்து காட்டும் மெர்சல்

தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படம் கடந்த புதன்கிழமை தீபாவளி அன்று வெளியாகி வசூலிலும் மெர்சல் காட்டியது என்பது அனைவரும் தெரிந்ததே.

2ஜி ஒதுக்கீடு முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு

கடந்த 2010ஆம் ஆண்டு 2ஜி ஏலத்தில் அரசுக்கு ரூபாய் ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படுத்தியதாக கணக்கு தணிக்கை அதிகாரி குற்றஞ்சாட்டியதை இதுகுறித்து வழக்கு தொடரப்பட்டது.