மொபைல் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க முடியாது: முதல்வரின் அதிரடி முடிவு
Send us your feedback to audioarticles@vaarta.com
மொபைல் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று மத்திய மாநில அரசுகள் நாடு முழுவதும் உள்ள மக்களிடம் வலியுறுத்தி வருகிறது. வரும் டிசம்பர் 31ஆம் தேதிக்குள் இந்த இணைப்பு நடைபெற வேண்டும் என்றும், அதன் பின்னர் மொபைல்-ஆதார் எண்களை இணைக்காதவர்களின் மொபைல் சேவை நிறுத்தப்படும் என்றும் கூறப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இன்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தான் இதுவரை தன்னுடைய மொபைல் எண்ணில் ஆதார் எண்ணை இணைக்கவில்லை என்றும் இனிமேலும் இணைக்கும் எண்ணம் இல்லை என்றும் தெரிவித்தார். இதனால் தன்னுடைய மொபைல் சேவை நிறுத்தப்பட்டாலும் பரவாயில்லை என்றும் அவர் கூறியுள்ளார். இன்று கொல்கத்தாவில் நடைபெற்ற கட்சி நிர்வாகிகளிடம் பேசிய முதல்வர் மம்தா, தன்னை போலவே மக்கள் அனைவரும் மொபைல்-ஆதார் எண்களை இணைக்க வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
இந்த இணைப்பால் ஒவ்வொருவரின் தனிப்பட்ட ரகசியங்கள் வெளியேற வாய்ப்பு இருப்பதாகவும் குறிப்பாக கணவன் - மனைவி உரையாடல் உள்பட பல தனிப்பட்ட விஷயங்கள் வெட்டவெளிச்சமாகிவிடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஒரு மாநிலத்தின் முதல்வரே மத்திய அரசின் திட்டத்தை எதிர்த்து குரல் கொடுத்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout