'மாமன்னன்' படக்குழு எடுத்த சூப்பர் முடிவு.. எகிற போகும் வசூல்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்த ’மாமன்னன்’ திரைப்படம் கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
குறிப்பாக இந்த படத்திற்கு ஊடகங்கள் மற்றும் யூடியூப் விமர்சகர்கள் பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்துள்ளதை அடுத்து குடும்பம் குடும்பமாக இந்த படத்திற்கு திரையரங்குகளுக்கு வந்து கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஒரு வாரத்தில் இந்த படம் 40 கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளதாக டிரேடிங் வட்டாரங்களில் இருந்து செய்திகள் வெளியாகி உள்ளன.
இந்த நிலையில் தமிழில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற ’மாமன்னன்’ திரைப்படம் தற்போது தெலுங்கில் ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். ஜூலை 14ஆம் தேதி தெலுங்கு மாநிலங்களில் இந்த படம் ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
‘புஷ்பா’ படத்திற்கு பின் பகத் பாசில் தெலுங்கில் பிரபலமாகிவிட்டதாலும், கீர்த்தி சுரேஷ் ஏற்கனவே தெலுங்கு திரையுலகில் பிரபலம் என்பதாலும் இந்த படம் தெலுங்கிலும் வசூலை குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Blockbuster #MAAMANNAN is all set for a grand release in Telugu. #Nayakudu releasing on July 14th.
— Diamond Babu (@idiamondbabu) July 6, 2023
Released by @AsianCinemas_ & @SureshProdns @mari_selvaraj @Udhaystalin @KeerthyOfficial #Vadivelu @arrahman #FahadhFaasil @SonyMusicSouth @UrsVamsiShekhar @teamaimpr pic.twitter.com/FA5VzQV54B
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com