'மாமன்னன்' படக்குழு எடுத்த சூப்பர் முடிவு.. எகிற போகும் வசூல்..!

  • IndiaGlitz, [Thursday,July 06 2023]

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்த ’மாமன்னன்’ திரைப்படம் கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

குறிப்பாக இந்த படத்திற்கு ஊடகங்கள் மற்றும் யூடியூப் விமர்சகர்கள் பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்துள்ளதை அடுத்து குடும்பம் குடும்பமாக இந்த படத்திற்கு திரையரங்குகளுக்கு வந்து கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஒரு வாரத்தில் இந்த படம் 40 கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளதாக டிரேடிங் வட்டாரங்களில் இருந்து செய்திகள் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில் தமிழில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற ’மாமன்னன்’ திரைப்படம் தற்போது தெலுங்கில் ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். ஜூலை 14ஆம் தேதி தெலுங்கு மாநிலங்களில் இந்த படம் ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

‘புஷ்பா’ படத்திற்கு பின் பகத் பாசில் தெலுங்கில் பிரபலமாகிவிட்டதாலும், கீர்த்தி சுரேஷ் ஏற்கனவே தெலுங்கு திரையுலகில் பிரபலம் என்பதாலும் இந்த படம் தெலுங்கிலும் வசூலை குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

டிவிட்டருக்கு மாற்றாக அறிமுகமான 'த்ரெட்ஸ்'… புதிய அம்சங்கள் என்னென்ன?

சமூக வலைத்தளங்களில் மிகவும் பிரபலமாக இருந்துவரும் டிவிட்டர் சமீபகாலகமாக பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துவரும் நிலையில் அதற்கு மாற்றாக தற்போது Treads செயலி அறிமுகமாகி இருக்கிறது.

ஓடும் ரயிலில் படப்பிடிப்பு.. பதைபதைக்கும் காட்சிகள்: 'மிஷன் இம்பாஸிபிள்' படத்தின் மேக்கிங் வீடியோ..!

பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் நடித்த 'மிஷன் இம்பாஸிபிள்' திரைப்படம் வரும் 12ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் ஏற்கனவே வெளியாகி இணையத்தில் வைரலானது என்பதை பார்த்தோம்.

மறைந்த இயக்குனர் கேவி ஆனந்த் வீட்ல விசேஷம்.. வாழ்த்திய திரையுலக பிரபலங்கள்..!

தமிழ் திரையுலகின் ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனர் கேவி ஆனந்த் மகள் திருமணம் இன்று நடந்ததை அடுத்து திரை உலக பிரபலங்கள் பலர் மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்

தனுஷின் 'D50' படத்தில் நடிப்பதை உறுதி செய்த பிரபல நடிகர்.. வைரல் பதிவு..!

தனுஷ் நடித்த இயக்கும் 'D50' படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பதும் இதனை அடுத்து தனுஷ் ரசிகர்கள் உற்சாகமாகினர் என்பதையும் பார்த்தோம். 

என்ன ஆச்சு பிக்பாஸ் பாவனி ரெட்டிக்கு..? மருத்துவமனையில் இருக்கும் அதிர்ச்சி புகைப்படங்கள்..!

பிக்பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர் பாவனி. இந்த நிகழ்ச்சியில் பாவனி ரெட்டி கடைசி வரை தாக்குபிடித்து 105 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்தார் என்பதும் இவருக்கு