'மாமன்னன்' படம் தான் கடைசி படமா? உதயநிதி பேட்டி

  • IndiaGlitz, [Thursday,May 12 2022]

உதயநிதி ஸ்டாலின் நடித்த ’நெஞ்சுக்கு நீதி’ என்ற திரைப்படம் வரும் 20ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் அவர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் ’மாமன்னன்’ என்ற திரைப்படத்தில் நடிக்க உள்ளார். கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்க உள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கி விட்டதாக தகவல் வெளியானது .

இந்த நிலையில் நமக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் உதயநிதி ஸ்டாலின், ‘மாமன்னன் திரைப்படம்தான் அனேகமாக எனது கடைசி படமாக இருக்கலாம் என்று கூறியுள்ளார். சினிமாவை விட அரசியலில் அதிக ஆர்வம் இருப்பதாகவும் அரசியலில் செய்ய வேண்டிய பணிகள் அதிகம் இருப்பதாகவும் எனவே 100% அரசியலில் கவனம் செலுத்துவதற்காகவும், அரசியலை இன்னும் அதிகம் கற்று கொள்ளவும் திட்டமிட்டுள்ளேன் என்றும் அவர் கூறியுள்ளார் .

உதயநிதியின் இந்த முடிவு ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும் அவரது சேவை தமிழ் நாட்டுக்கு தேவை என்ற வகையில் அவரது முடிவு சரியாகவே இருக்கும் என திமுக தொண்டர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் உதயநிதி ஸ்டாலின் இந்த பேட்டியில் கமல்ஹாசனுடன் அரசியல் ரீதியான எதிர்ப்பு, சினிமாரீதியான உறவு உள்பட பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். இந்த பேட்டியின் முழு வீடியோ இதோ:

More News

நடிகையை ஸ்கேன் எடுத்தபோது படம் பிடித்த மர்ம நபர்: போலீஸார் விசாரணை

தனியார் மருத்துவமனையில் உள்ள ஸ்கேன் சென்டரில் நடிகையை ஸ்கேன் செய்த போது அங்கிருந்த மர்ம நபர் ஒருவர் அவரை படம் எடுத்ததாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

'நீ வாத்தி கம்மிங் பண்றியா', நான் அதைவிட பண்றேன் பாரு: 'தளபதி 66' இசையமைப்பாளர் தமன் சவால்!

'விஜய்க்காக நீ வாத்தி கம்மிங், அரபிக்குத்து பண்றியா, நான் அதை விட பெரிதாக பண்ணி காட்டுகிறேன் பார்' என்று அனிருத்துக்கு சவால் விடும் வகையில் 'தளபதி 66' இசையமைப்பாளர் தமன் நமக்கு அளித்த

ஒன்றியத்தின் தப்பாலே, சாவி இப்ப திருடன் கையில: கமல் குறிப்பிடுவது யாரை?

கமல்ஹாசன் நடிப்பில் அனிருத் இசையில் உருவான 'விக்ரம்' திரைப்படத்தின் சிங்கிள் பாடலான 'பத்தல பத்தல' சற்று முன் வெளியாகியுள்ள நிலையில் இந்த பாடலின் வரிகள் ஒரு குறிப்பிட்ட

கமல்ஹாசனின் 'விக்ரம்' படத்தில் சூர்யாவா? ஏற்கனவே ஒரு படத்தில் நடித்துள்ளாரே!

 கமலஹாசன் நடித்த ஒரு படத்தில் ஏற்கனவே சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள நிலையில் தற்போது 'விக்ரம்' படத்திலும் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது .

ஓடிடியில் ரிலீஸ் ஆகும் பா ரஞ்சித் அடுத்த படம்: அதிகாரபூர்வ அறிவிப்பு

பா ரஞ்சித் அடுத்த திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ் ஆக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.