'மாமன்னன்' படத்தின் 4 நாட்கள் வசூல் இத்தனை கோடியா? உதயநிதி கடைசி படத்தின் சாதனை..!

  • IndiaGlitz, [Monday,July 03 2023]

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவான ’மாமன்னன்’ திரைப்படம் கடந்த வியாழக்கிழமை பக்ரீத் திருநாளில் வெளியாகியது என்பதும் இந்த படத்திற்கு ஒட்டுமொத்தமாக பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்ததை அடுத்து இந்த படத்திற்கு கூட்டம் கூட்டமாக ஃபேமிலி ஆடியன்ஸ்கள் திரையரங்குகளில் குவிந்தனர் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நான்கு நாட்களில் இந்த படம் 25 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக டிரேடிங் வட்டாரங்களிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது. இது உதயநிதி ஸ்டாலின் படங்களில் அதிகபட்ச வசூல் என்றும் கூறப்படுகிறது.

’மாமன்னன்’ திரைப்படம் தான் தனது கடைசி படம் என உதயநிதி ஸ்டாலின் ஏற்கனவே கூறியுள்ள நிலையில் அவரது கடைசி படம் வசூல் சாதனை செய்துள்ள படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே வரும் 15ஆம் தேதி வரை வேறு எந்த பெரிய படங்களும் ரிலீஸ் இல்லை என்பதால் ’மாமன்னன்’ திரைப்படம் இனிவரும் நாட்களில் அதிகமாக வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

More News

சிறப்பான 13 வருடங்கள்.. நீ இல்லையென்றால் நான் என்ன செய்திருப்பேன்: செல்வராகவனின் நெகிழ்ச்சி பதிவு..!

திருமணம் ஆகி 13 வருடங்கள் ஆனதை குறிப்பிடும் வகையில் இயக்குனர் செல்வராகவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெகிழ்ச்சியான பதிவு செய்துள்ளார். இந்த 13 வருடங்களில் நீ இல்லை என்றால் நான் என்ன

குடும்பத்துடன் சூர்யாவின் ஜாலி வெளிநாட்டு சுற்றுலா.. வீடியோ வைரல்..!

இந்த நிலையில் தற்போது சூர்யா 'கங்குவா' என்ற படத்தில் நடித்து வரும் நிலையில் அவர் குடும்பத்துடன் ஜாலியாக அட்லாண்டிக் கடலில் உள்ள தீவுக்கு சுற்றுலா சென்று உள்ளார்.

திமுகவில் சாதிய பாகுபாடு..! பா.ரஞ்சித் கருத்துக்கு பதில் அளித்த உதயநிதி..!

இயக்குனர் பா.ரஞ்சித் 'மாமன்னன்' திரைப்படம் குறித்து தனது கருத்தை தெரிவித்த நிலையில் அதில் 'திமுக கட்சியில் இன்றுவரை பெரும் சவாலாக இருக்கும் சாதி பாகுபாட்டை அவரும் அறிந்தே இருப்பார்,

தயாரிப்பாளர் சங்கத்துடன் மோதலா? நடிகர் சங்கத்தின் முக்கிய அறிக்கை..!

தென்னிந்திய நடிகர் சங்கம் மற்றும் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கங்களுக்கு இடையே மோதல் என செய்திகள் வெளியான நிலையில்  நடிகர் சங்கம் விளக்கம் இதுகுறித்து அறிக்கை வெளியிட்டு விளக்கம்

10,000 பெண்களுடன் உடலுறவா? சொந்த குரலால் வசமாக சிக்கிய நட்சத்திர கால்பந்து வீரர்?

பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய பிரபல நட்சத்திர வீரர் ஒருவரின் வழக்கு தற்போது இங்கிலாந்து நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் நான் 10,000 பெண்களுடன் உடலுறவு வைத்துக்கொண்டேன்