மாரி செல்வராஜ் உயிரை காப்பாற்றிய வடிவேலு.. எப்படி தெரியுமா?
- IndiaGlitz, [Monday,July 10 2023]
’மாமன்னன்’ என்ற திரைப்படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் சமீபத்தில் இந்த படத்தின் வெற்றி விழாவில் பேசிய போது ’தான் பல முறை தற்கொலைக்கு முயன்றதாகவும் அப்போதெல்லாம் வடிவேலு காமெடி தான் தன்னுடைய தற்கொலை முடிவை மாற்றியதாகவும் தெரிவித்துள்ளார்.
உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், பகத் பாசில், வடிவேலு உள்பட பலர் நடிப்பில் உருவான ’மாமன்னன்’ திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தின் வசூல் 50 கோடியை கடந்து விட்டதாகவும் சமீபத்தில் இந்த படத்தின் வெற்றி விழாவின் போது வட குழுவினர் தெரிவித்தனர்
இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் மாரி செல்வராஜ் பேசிய போது தன்னுடைய வாழ்க்கையில் பல முறை தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்று நினைத்து இருந்ததாகவும் ஒரு முறை தற்கொலை செய்ய முயற்சி செய்தபோது வடிவேலு நடித்த காமெடி காட்சியை பார்த்து தான் தற்கொலை வடிவை மாற்றிக் கொண்டதாகவும் தெரிவித்தார். அந்த வகையில் என்னை தற்கொலை முயற்சியில் இருந்து காப்பாற்றியவர் வடிவேலு தான் என்றும் அவர் நெகிழ்ச்சியுடன் கூறினார்
மேலும் ’மாமன்னன்’ படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த நடிகர் நடிகைகள் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் கூறினார்