யுவனின் குரலில் 'மாமனிதன்' படத்தின் 'ஏ ராசா' பாடல்!

  • IndiaGlitz, [Friday,May 28 2021]

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடிப்பில் சீனுராமசாமி இயக்கத்தில் யுவன்சங்கர் ராஜா தயாரித்து இசையமைத்த திரைப்படம் ‘மாமனிதன்’ என்பதும் இந்த படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் இன்று வெளியாக இருப்பதாக நேற்று அறிவிக்கப்பட்டது என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் தற்போது இந்த பாடல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த பாடலை இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இணைந்து இசையமைத்த நிலையில் யுவன் சங்கர் ராஜா பாடியுள்ளார். பா விஜய் எழுதிய இந்த பாடலின் வீடியோவில் யுவன்சங்கர் ராஜா பாடிய காட்சிகளை ரசிகர்கள் ரசித்து வருகின்றனர். பலர் இந்த பாடலின் கமெண்ட்டில் யுவன் சங்கர் ராஜாவே அடுத்து ஹீரோவாக நடிக்கலாம் என்று குறிப்பிட்டு வருகிறார்கள்

விஜய் சேதுபதி ஜோடியாக காயத்ரி நடித்திருக்கும் இந்த படத்தில் குரு சோமசுந்தரம் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ‘மாமனிதன்’ படம் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராகி ஒருசில வருடங்கள் ஆன நிலையில் ஒரு சில காரணங்களால் ரிலீசாகாமல் தள்ளிப் போய்க் கொண்டே உள்ளது. ஆனால் தற்போது இந்த படத்தின் பிரச்சனைகள் அனைத்தும் முடிந்து விட்டதாகவும் விரைவில் ரிலீசாக போவதாகவும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.