புடவை அணிந்த தசாவதாரம் பட அழகி… வைரலாகும் இன்ஸ்டா பதிவு!

  • IndiaGlitz, [Monday,March 01 2021]

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 2008 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் “தசாவதாரம்”. இதில் கமல்ஹாசனின் 10 கேரக்டர் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. இந்தப் படத்தின் முக்கியக் கதாபாத்திரத்திரத்தில் நடித்து இருந்தார் பாலிவுட் கவர்ச்சி நடிகை மல்லிகா ஷெராவத். இதற்கு முன்பு தமிழில் வெளியான ஒரு சில படங்களில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடி இருந்த மல்லிகா “தசாவதாரம்“ படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்று இருந்தார்.

அடுத்து இவர் நடிகர் சிம்பு நடிப்பில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான “ஒஸ்தி’‘ திரைப்படத்திற்காக ஒரு பாடலுக்கு நடனம் ஆடினார். தற்போது 10 வருடங்கள் கழித்து தமிழில் மீண்டும் நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. “தம்பி வெட்டோத்தி சுந்தரம்“, “சௌகார் பேட்டை“ போன்ற தமிழ் படங்களை இயக்கிய இயக்குநர் வடிவுடையான் இயக்கும் “பாம்பாட்டம்” படத்தில் மல்லிகா ஷெராவத் நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் மல்லிகா ஷெராவத் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வபோது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது வெளியிட்டு உள்ள இன்ஸ்டா பதிவில் அவர் ஆரஞ்சு நிறப் புடவை அணிந்து Always saree girl எனப் பதிவிட்டு உள்ளார். இந்தப் பதிவு நெட்டிசன்கள் மத்தியில் படு வைரலாகி வருகிறது.

More News

ஒருத்தன் எவ்வளவு நாள் தான் நல்லவனாவே இருக்குறது: 'நெஞ்சம் மறப்பதில்லை' ஸ்னீக்பீக் வீடியோ

செல்வராகவன் இயக்கத்தில் எஸ்ஜே சூர்யா நடிப்பில் உருவாகிய 'நெஞ்சம் மறப்பதில்லை' என்ற திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி ஒரு சில ஆண்டுகள் ஆன போதிலும் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டு கொண்டே இருந்தது.

'வலிமையில்' தல வேற லெவல் ஆக்சன்: ஒளிப்பதிவாளருடன் இணைந்து டுவிட் போட்ட பிரபலம்!

'வலிமை' திரைப்படத்தில் தல வேற லெவல் ஆக்ஷன் என 'வலிமை' படத்தின் ஒளிப்பதிவாளர் நீரவ்ஷாவுடன் டுவிட் ஒன்றை பிரபலம் ஒருவர் பதிவு செய்துள்ளது வைரலாகியுள்ளது 

'கர்ணன்' செகண்ட் சிங்கிள் டைட்டில் மற்றும் ரிலீஸ் நேரம் அறிவிப்பு!

தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள 'கர்ணன்' திரைப்படத்தை கலைபுலி எஸ் தாணு அவர்கள் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார் என்பது தெரிந்ததே

என்ன ஒரு எடிட்டிங்? 'கண்டா வரச்சொல்லுங்க' பாடலுக்கு 'குக் வித் கோமாளி' புகழ் வீடியோ!

தனுஷ் நடித்து முடித்துள்ள 'கர்ணன்' திரைப்படத்தில் இடம்பெற்ற 'கண்டா வரச்சொல்லுங்க' என்ற பாடல் சமீபத்தில் வெளியானது என்பதும் கிராமிய பாடகி மாரியம்மாள் என்பவர் பாடிய இந்த பாடல் பட்டிதொட்டியெங்கும்

பள்ளி நாட்களும், பல்லாவரம் மலையும்: சமந்தாவின் வீடியோ வைரல்!

தந்தை பள்ளிநாட்களில் பல்லாவரம் அருகே வாழ்ந்த மலரும் நினைவுகளை நடிகை சமந்தா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார்