உன் மீது அளவுகடந்த கோபத்தில் வழியனுப்பி வைக்கின்றோம்: மாறன் மறைவு குறித்து மதிமுக பிரமுகர்
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய் நடித்த கில்லி உள்பட பல திரைப்படங்களில் நடித்த நடிகர் மாறன் கொரோனாவால் இன்று காலை உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் மதிமுக பிரமுகர் மல்லை சத்யா அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் மாறன் குறித்து ஒரு நீண்ட பதிவை உருக்கத்துடன் செய்துள்ளார். அந்த பதிவு இதோ:
போய் வா மாறா! உன் மீது அளவுகடந்த கோபத்தில் வழியனுப்பி வைக்கின்றோம். உன் நோய் குறித்து முன்கூட்டியே சொல்லாததால் நோய்க்கு உண்டான மருந்தும் சிகிச்சை இருந்தும் அளவு கடந்த நம்பிக்கை இந்த கவவையான சூழ்நிலையை உருவாக்கி விட்டாய்.
யார் அழைத்தாலும் ஓடோடி வந்து உதவிக் கரம் நீட்டியவனே, அழைத்தவன் எமன் என்று அறியாமல் உன்னை ஒப்புக் கொடுத்து விட்டயே. கடினமான சூழலை நீ எதிர் கொள்ளும் பொழுதெல்லாம் என் அண்ணன் மல்லை சத்யா இருக்கின்றார் என்று இறுமாந்து இருந்தயே! ஏன் இந்த சூழலை என்னிடம் சொல்லாமல் மறைத்தாய் மாறா.
எல்லோரையும் சிரிக்க வைத்து மகிழ்ந்தவனே! உன் இதய நேசிப்பிற்கு உரியவர்கள் எல்லாம் கலங்கி நிற்கின்றோம் யாருக்கு யார் ஆறுதல் சொல்வது என்று தெரியாமல்.
தலைவர் வைகோ அவர்கள் மாறனை நன்கு அறிவார். இன்று காலை தகவலை சொன்ன உடன் நம்ம நடிகர் மாறனா என்று தன் கவலையை பகிர்ந்து கொண்டார். 2009 ஆம் ஆண்டு செங்கல்பட்டு மாவட்ட கழக இடம் வாங்க நானும் அண்ணன் பாலவாக்கம் சோமு அவர்களும் இடம் பார்த்து கொண்டு இருந்த போது மாறன் சொல்லித் தான் அந்த இடத்தை வாங்கினோம்.
நன்றி மறவாதவன் மாறன். எங்கு பேசினாலும் தான் ஏறி வந்த ஏணிகள் குறித்து மறவாமல் பதிவு செய்வார். ஏப்ரல் 06 அன்று நடந்து முடிந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் மதுராந்தகம் தொகுதியில் போட்டியிட்ட எனக்கு வாக்குகள் சேகரித்த நல்ல உள்ளம். மே 02 தேர்தல் முடிவுக்கு பின்னர் வீட்டில் தேம்பி தேம்பி அழுதுள்ளார். ஒரு நல்ல மனிதரை மதுராந்தகம் தொகுதி மக்கள் இழந்து விட்டார்களே என்று.
மே 06 இரவு மாமல்லபுரத்திற்கு கண்ணீரோடு வந்து அமைதியாக நின்று கொண்டு இருந்தார். மாறன் இருக்கும் இடம் எப்பொழுதும் கலகலப்பாக இருக்கும். ஆனால் இறுதி வரை அமைதியாக இருந்து விட்டு விடை பெற்றார். நாடு கடந்து நன்பர்களைப் பெற்றவன். ’காலா’, கில்லி, தலைநகரம் சார்பேட்ட போன்ற படங்களில் நடித்துள்ளார். பலருக்கும் துணையாக இருந்த மாறன் விடை பெற்றான்
அவரை இழந்து வாடும் அவர் காதல் மனைவி திருமதி கிளாரமாறன் அவர்களுக்கும் அவரின் அன்பு மகள் ஏஞ்சலுக்கும் அவரின் குடும்பத்தினருக்கும் ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை காலம் அவர்களை தேற்றும்
அன்பின் தோழமைகளே விளையாட்டாக இருந்து விடாதீர்கள், சின்ன அறிகுறி என்றாலும் உடனடியாக மருத்துவரின் ஆலோசனைப்படி சிகிச்சை பெற்றுக் கொள்ளுங்கள். வரும் முன் காப்பதே சிறந்த வழி“ என்றுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments