இவரது இடத்தை எந்த கொம்பனாலும் நிரப்ப முடியாது… பெருமிதம் கொள்ளும் மும்பை கேப்டன்!
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்திய ஐபிஎல் தொடங்கியதில் இருந்தே மும்பை இந்தியன்ஸ் அணிக்காக கிரிக்கெட் போட்டியில் விளையாடி வரும் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா தற்போது ஐபிஎல் மற்றும் உரிமையாளர்கள் கிரிக்கெட் போட்டியில் இருந்து முற்றிலும் ஓய்வு பெறுவதாக அறிவித்து இருக்கிறார். இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. காரணம் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக இவர் 122 ஐபிஎல் போட்டிகளில் கலந்து கொண்டு 170 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். மேலும் 5 முறை மும்பை இந்தியன்ஸ் அணி கோப்பையை கைப்பற்றியதிலும் இவரது பங்கு அதிகம். இதனால் இவரது பிரிவிற்கு இந்திய ரசிகர்கள் கடும் வருத்தம் தெரிவித்து உள்ளனர்.
இது குறித்து மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “லசித் மலிங்காவை நாங்கள் மிஸ் பண்ணுவோம். இவர் ஒரு மேட்ச் வின்னர். இவரால் நாங்கள் பல போட்டிகளில் வெற்றி கண்டுள்ளோம். இவரது பிரிவை எங்கள் அணியில் இருக்கும் அனைவரும் உணர்வோம்” என்று பதிவிட்டு இருக்கிறார். இந்தப் பதிவு சமூக வலைத்தளத்தில் கடும் வைரலாகி இருக்கிறது.
இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) டி20 கடந்த 2008 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் வாரியத்தால் தொடங்கப்பட்டது. தற்போதுவரை 13 தொடர் போட்டிகள் நடைபெற்று உள்ளன. இதில் மும்பை அணி 5 முறையும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 முறையும் கோப்பையை கைப்பற்றி உள்ளது. வரும் பிப்ரவரி 2021 இல் 14 ஆவது ஐபிஎல் டி20 சீசன் நடைபெற உள்ளது. இதற்காக 8 இந்திய அணிகளும் தற்போது வீரர்களை தேர்வு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் சில அணிகள் ஏற்கனவே உள்ள வீரர்களை விலக்கி விட்டு புதிய வீரர்களை தேர்வு செய்வதற்கான பணியில் இறங்கி உள்ளது. இத்தேர்வுக்கான ஏலம் பிப்ரவரி 18 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வந்த லசித் மலிங்கா தனது ஓய்வை அறிவித்து இருக்கிறார். இந்த அறிவிப்பு ரசிர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.
Rohit Sharma "It is hard to fill Malinga’s spot in the team considering his contribution. Malinga has been a match winner for MI and also Sri Lanka, it is unfortunate that he is not a part of the team and his experience will be missed." #IPL2020 #LasithMalinga
— Wesley05 (@WesleyC051) September 18, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout