உங்களின் இந்த உதவியை எங்கள் நாடு என்றும் மறக்காது: தோனிக்கு நன்றி சொன்ன மலிங்கா..!

  • IndiaGlitz, [Saturday,May 27 2023]

உங்களின் இந்த உதவியை எங்கள் நாடு என்றும் மறக்காது என்று தோனிக்கு முன்னாள் இலங்கை கிரிக்கெட் அணியின் பந்துவீச்சாளர் மலிங்கா நன்றி தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் முடிவுக்கு வரும் நிலையில் நாளை இறுதிப் போட்டி நடைபெற உள்ளது. சென்னை மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையே நடைபெறும் இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி சாம்பியன் பட்டம் வெல்லும் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய கண்டுபிடிப்பான பதிரானா மீது தோனி மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளார். 20 வயதே ஆன பதிரானா தோனியின் ஆதரவில் இருப்பதால் அவருக்கு நல்ல எதிர்காலம் உள்ளது என்று வர்ணனையாளர்கள் கூறி வருகின்றனர்

சமீபத்தில் பதிரானா குடும்பத்தினர் சென்னையில் தோனியை சந்தித்த போது ’எங்கள் பதிரானா ஒரு நல்ல பாதுகாவலர் கையில் இருப்பது எங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது’ என்றும் தெரிவித்தனர். அதற்கு தோனி, ‘நீங்கள் பதிரானா குறித்து எந்த கவலையும் பட வேண்டாம், அவரை நான் பார்த்துக் கொள்கிறேன்’ என்று அவரது குடும்பத்தினருக்கு தோனி நம்பிக்கையை அளித்ததாகவும் தகவல் வெளியானது.

இந்த நிலையில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் மலிங்கா, தோனிக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார். அதில், தோனி.. எங்கள் குட்டி பதிரானாவை எங்களுக்கு இன்னொரு மலிங்கா கிடைக்கும் வகையில் தயார் செய்து உள்ளீர்கள், உங்களின் இந்த உதவியை எங்கள் நாடு என்றும் மறக்காது’ என்று தெரிவித்துள்ளார்.

More News

இன்னும் இளமை தான்.. சிம்ரனின் லேட்டஸ்ட் போட்டோஷூட் பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம்!

நடிகை சிம்ரனின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படத்தை பார்த்து அவர் இன்னும் இளமையாக இருப்பதாக ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்து கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர் 

ரிஸ்க் எடுத்த வடிவேலுவை பார்த்து சிரித்த ராதிகா.. 'சந்திரமுகி 2' படப்பிடிப்பில் கலகலப்பு..!

 'சந்திரமுகி 2 'படத்தின் படப்பிடிப்பின் போது நடிகர் வடிவேலு தனது புகழ்பெற்ற வசனத்தை பேசி காட்டிய போது அதைக் கேட்டு நடிகை ராதிகா சிரித்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இப்படிப்பட்ட அரசியல்வாதிகளை எப்படி நம்புவது? கமல்ஹாசனை மறைமுகமாக தாக்கினாரா சின்மயி?

பாலியல் தொல்லைக்கு ஆளானதாக மல்யுத்த வீரர்கள் கடந்த ஒரு மாதமாக டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் நிலையில் இந்த போராட்டத்திற்கு கமல்ஹாசன் தனது சமூக வலைதள பக்கத்தில்

ஏஆர் ரஹ்மான் பாடிய 'மாமன்னன்' படத்தின் பாடல்.. 5 நிமிட வீடியோ வைரல்..!

 மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்த 'மாமன்னன்' திரைப்படம் விரைவில் ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற ஏஆர் ரகுமான் பாடிய பாடல் வீடியோ சற்றுமுன் வெளியாகி

எப்போ இயக்குநர் தொப்பியை போடுவீங்க? உலகநாயகனின் புகைப்படத்திற்கு ரசிகர்கள் எழுப்பிய கேள்வி!

இந்திய சினிமாவில் முக்கிய பிரபலமாக இருந்துவரும் நடிகர் கமல்ஹாசன் நடிப்பை தவிர இயக்குநர், பாடகர், திரைக்கதை எழுத்தாளர், தயாரிப்பாளர், நிகழ்ச்சி தொகுப்பாளர் என்று பன்முக அடையாளங்களை கொண்டவர்