கிளி-குரங்கு விமர்சனத்தால் 1 ஆண்டு சஸ்பெண்ட் ஆன மலிங்கா

  • IndiaGlitz, [Wednesday,June 28 2017]

சமீபத்தில் நடைபெற்ற சாம்பியன்ஷிப் டிராபி கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி மிக மோசமாக விளையாடியதால் அதிருப்தி அடைந்த அந்நாட்டு விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிரி ஜெயசேகரா, இலங்கை வீரர்களின் உடல்தகுதி குறித்து விசாரணை நடத்தப்படும் என்று கூறினார்.

இதுகுறித்து கிரிக்கெட் போர்டின் அனுமதி பெறாமலேயே ஊடகங்களுக்கு பேட்டியளித்த இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா, 'கிளிகூடு பற்றி குரங்குக்கு என்ன தெரியும்' என்று கூறினார். மலிங்காவின் இந்த பேட்டி கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இதுகுறித்து விசாரணை செய்த இலங்கை கிரிக்கெட் வாரியம் மலிங்காவை ஒரு ஆண்டு சஸ்பெண்ட் செய்தது. ஆறு மாதங்களுக்கு பின் இந்த சஸ்பெண்ட் உத்தரவு அமலுக்கு வரும் என்றும் அதுவரை அவர் விளையாடும் போட்டிகளில் 50% அபராதம் விதிக்கப்படும் என்று உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவால் இலங்கை கிரிக்கெட் வீரர்களிடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

More News

அதர்வா பட விழாவில் ரம்யாகிருஷ்ணனின் பாகுபலி கட்டளை

எஸ்.எஸ்.ராஜமெளலியின் பிரமாண்டமான வெற்றிப்படத்தில் ராஜமாதா சிவகாமியாக நடித்த ரம்யாகிருஷ்ணன் நடிப்பு இந்த படத்தின் வெற்றிக்கு அஸ்திவாரம் போல் அமைந்தது என்றால் அது மிகையில்லை...

தமிழ் சினிமாவில் இன்னொரு ஸ்போர்ட்ஸ் படம்: விஜய்மில்டன் இயக்குகிறார்

பிரபல இயக்குனர் விஜய்மில்டன், 'கோலிசோடா' படத்தின் இரண்டாம் பாகத்தை விரைவில் இயக்கவுள்ளதாக வெளிவந்த செய்தியினை சமீபத்தில் பார்த்தோம்.

ரஜினியின் '2.0'ஐ முந்துகிறதா 'காலா'

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து முடித்துள்ள '2.0' படத்தின் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் மற்றும் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்திற்காக ஹாலிவுட்டில் பிரமாண்டமான ராட்சத பலூன் பறக்க வைத்து புரமோஷன் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது...

விக்னேஷ்சிவனின் திருமண பாடல்! நயன்தாராவை மனதில் வைத்து எழுதியதா?

பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் நயன்தாராவுக்கும் காதல் என்று கடந்த சில வருடங்களாக கோலிவுட்டில் கிசுகிசு எழுந்து வருகிறது. இந்த கிசுகிசுவை இருவருமே மறுக்கவும் இல்லை, ஒப்புக்கொள்ளவும் இல்லை...

இந்த எச்சைகள் எனக்கு தேவையே இல்லை. பிக்பாஸில் பொங்கிய காயத்ரி ரகுராம்

உலக நாயகன் கமல்ஹாசன் நடத்தி வரும் 'பிக்பாஸ்' நிகழ்ச்சி இப்போதுதான் சுவாரஸ்யத்தின் உச்சத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது....