அதிபர், பிரமர் கைது… நாடு முழுக்க வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு… மாலியில் நடக்கும் பரபரப்பு சம்பவங்கள்!!!
- IndiaGlitz, [Wednesday,August 19 2020]
வடக்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் தற்போது இராணுவத்தின் ஆதிக்கம் அதிகரித்து இருப்பதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அந்நாட்டின் அதிபர் மற்றும் பிரதமர் , சில மந்திரிகளும் கைது செய்யப்பட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆட்சியைக் கலைத்துவிட்டு இராணுவம் ஆட்சியைப் பிடிக்க முயற்சிப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
மாலியின் தலைநகர் பமாகோவில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள காதி என்னும் பகுதியில் இராணுவ மையம் அமைந்துள்ளது. இந்த இராணுவத் தளத்தின் உயர்மட்ட அதிகாரிகளையும் இராணுவக் கிளர்ச்சிக் குழு கைது செய்து வைத்திருப்பதாகவும் தற்போது பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது. இதனால் ஒட்டுமொத்த நாட்டிலும் கிளர்ச்சிக்காரர்களின் ஆதிக்கம் அதிகரித்து அரசாங்கம் கவிழும் சூழ்நிலை ஏற்பட்டு இருப்பதகாவும் கூறப்படுகிறது.
அந்நாட்டின் அதிபர் இப்ராகிம் பவுபக்கர் கெய்டா மற்றும் பிரதமர் பவ்பவ் சிஸ்சே ஆகியோரையும் கிளர்ச்சிக் காரர்கள்குழு கைது செய்து வைத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்தக் கிளர்ச்சிக் காரர்களின் குழுவுக்கு யார் உடந்தையாக இருக்கிறார்கள் என்ற தகவல் எதுவும் வெளியாகவில்லை என்றும் கூறப்படுகிறது. காதி நகரின் தெருக்களில் தற்போது இராணுவத்தினர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுடுவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. ஆட்சியைக் கலைத்து விட்டு இராணுவத்தின் பிடிக்கும் மாலி செல்லும்போது மக்களின் நிலைமை என்னவாகுமோ என்ற கேள்விக்குறியும் தற்போது எழுந்திருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.