மாலத்தீவு போட்டோ....! பிரபலங்களை எச்சரித்த ஸ்ருதி ஹாசன்...!
Send us your feedback to audioarticles@vaarta.com
திரையுலக பிரபலங்கள் மாலத்தீவு செல்வது குறித்து கருத்து பதிவிட்ட நடிகை ஸ்ருதிஹாசனுக்கு, நெட்டிசன்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
சமீபத்தில் பிரபல நடிகைகள் மாலத்தீவு செல்வதும், அங்கு எடுத்த கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதும் இயல்பான ஒன்றாக மாறிவிட்டது.
உலகமெங்கும் கொரோனா வைரஸ் கோரதாண்டவம் ஆடி வருகிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தொற்று பாதிக்கப்பட்டு, சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். சமூக வலைதள பக்கம் சென்றாலே, உறவுகள் பாதிக்கப்பட்டதாக பலரும் உதவி கேட்டு திண்டாடி வருகிறார்கள். தினசரி கொரோனா பாதிப்பு என்பது பல ஆயிரங்களை கடந்து வருவதால், மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள், ஆக்சிஜன் தட்டுப்பாடு மற்றும் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் பல உயிர்கள் இறந்துவருவதும், வேதனைக்குள்ளான செய்தியாக இருந்து வருகிறது.
இந்தநிலையில் சில திரையுலக பிரபலங்களும், பாலிவுட் நட்சத்திரங்களும் மாலத்தீவு சென்று, ஜாலியாக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். இதைப்பார்த்த மக்கள் அவனவன் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் வேளையில், இவங்களுக்கு இப்ப இது தேவையா..? என கருத்துக்கள் பதிவிட்டு கொந்தளித்து வருகிறார்கள். பாலிவுட் நடிகை ஆலியா பட், கொரோனா குணமான 4-வது நாளே தனது காதலன் ரன்பீர் கபூருடன் மாலத்தீவு சென்று புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார். இதைப்பார்த்த இணையவாசிகள் பலரும் விமர்சித்து இருந்தனர்.
இந்நிலையில் நடிகை ஸ்ருதிஹாசன் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது,
" மக்கள் அனைவரும் கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் நேரம் இது. மாஸ்க் இல்லாமல் நீச்சல் குளத்தில் குளிக்கும் நேரமல்ல, நீங்கள் சவுகரியமாக இருந்தால் அதை உங்களுடனே வைத்துக்கொள்ளலாம். அதை மக்கள் முன் வெளிப்படுத்த தேவையில்லை. காரணம் அவர்கள் கஷ்டத்தில் உள்ளார்கள்" என்று கூறியுள்ளார்.
ஸ்ருதிஹாசன் இப்படி பேசியுள்ளதால் இணையவாசிகள் பலரும் அவரை, நடிகையாக இருந்துகொண்டு நம் நிலையை புரிந்துகொண்டு பேசுகிறார் என பாராட்டி வருகிறார்கள்.
ஜான்வி கபூர் , சாரா அலி கான் உள்ளிட்ட பாலிவுட் நடிகைகள் அடிக்கடி சுற்றுலா புகைப்படங்களை வெளியிட்டு வந்தனர். இதைப்பார்த்து எரிச்சலடைந்த நெட்டிசன்கள் நீங்கள் எங்குவேண்டுமானாலும் செல்லுங்கள், அதை ஏன் சமூக வலைத்தளங்களில் பதிவிடுகிறீர்கள் என்று காரசாரமாக கேள்வி கேட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments