close
Choose your channels

மாலத்தீவு எடுத்த அதிரடி முடிவு, நடிகைகள் சோகம்: சோனமுத்து போச்சா?....

Wednesday, April 28, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த சில மாதங்களாக மாலத்தீவுக்கு தமிழ் நடிகைகள் பலர் சென்று வந்தனர் என்பதும் அங்கு அவர்கள் இயற்கை காட்சிகளோடு தங்களுடைய கிளாமர் புகைப்படங்களையும் வீடியோக்களையும் இன்ஸ்டாகிராமில் பதிவு செய்தார்கள் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது மாலத்தீவுக்கு நடிகைகள் உள்பட இந்தியர்கள் யாரும் வர வேண்டாம் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் தற்போது கொரோனா இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருவதை அடுத்தே இந்த முடிவை மாலத்தீவு அரசு எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில மாதங்களாக காஜல் அகர்வால், ஷிவானி, ஜனனி ஐயர், பிரணிதா சுபாஷ் உள்பட பல நடிகைகள் மாலத்தீவு சென்று வந்தனர் என்பதும் நடிகைகள் மட்டுமின்றி சின்னத்திரை நடிகைகளும் தொகுப்பாளினிகள் சென்று வந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இன்ஸ்டாகிராம் சமூகவலைதளத்தில் மில்லியன்கணக்கில் ஃபாலோயர்கள் வைத்திருக்கும் நடிகைகளுக்கு மாலத்தீவு சென்றுவர விமான டிக்கெட், தங்குவதற்கு ஸ்டார் ஓட்டல், உணவு உட்பட அனைத்தும் இலவசம் என்பதால் நடிகைகள் பலர் மாலத்தீவுக்கு சென்று வந்தனர் மாலத்தீவில் சுற்றுலாவை பிரபலப்படுத்தவே நடிகைகளுக்கு இந்த சலுகைகள் வழங்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்ததை அடுத்து இந்தியாவில் இருந்து யாரும் வரவேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளதால் நடிகைகள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே ஸ்ருதிஹாசன் உள்பட ஒரு சிலர், நடிகைகள் மாலத்தீவுக்கு சென்று வந்ததை கண்டித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment