விஜய் அண்ணாகிட்ட கொடுத்துடுங்க: ஹரிஷ் கல்யாணை மெர்சலாக்கிய ரசிகையின் பரிசு

  • IndiaGlitz, [Wednesday,January 10 2018]

சமீபத்தில் மலேசியாவில் நடைபெற்ற தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கத்தின் நட்சத்திர விழாவுக்கு ரஜினி, கமல் உள்பட கோலிவுட் திரையுலகினர் பலர் கலந்து கொண்டனர். ஆனால் விஜய் தனது குடும்பத்தினர்களுடன் சீன சுற்றுப்பயணத்தில் இருந்ததால் அவரால் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியவில்லை

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ஹரிஷ் கல்யாண் இந்த விழாவில் கலந்து கொண்டார். அப்போது மலேசிய ரசிகை ஒருவர் ஹரிஷ் கல்யாணை சந்தித்து தளபதி விஜய்யை பென்சிலால் வரைந்த ஓவியம் ஒன்றை அவரிடம் கொடுத்து, இந்த பரிசை விஜய் அண்ணாவிடம் கொடுத்துவிடுங்கள்' என்று கூறியுள்ளார். மேலும் உங்களையும் எனக்கு ரொம்ப பிடிக்கும் என்றும் அந்த ரசிகை கூறியுள்ளார்.

இந்த தகவலை ஹரிஷ் கல்யாண் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து விஜய் ரசிகையை சந்தித்த அந்த தருணம் விலை மதிப்பில்லாதது என்று கூறியுள்ளார். மெர்சல் படத்தில் விஜய் நடித்த 'தளபதி' கேரக்டரை அந்த ரசிகை தத்ரூபமாக வரைந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

மேக்கப் கலைஞர் தீக்சிதாவின் நட்சத்திர அவதாரங்கள்

திரையுலகில் மேக்கப் கலைஞர்களின் பணி இன்றியமையாத ஒன்று. அழகில்லாதவர்களுக்கு அழகூட்டுவதும், அழகானவர்களை அழகுக்கு அழகூட்டுவதும் மேக்கப் கலைஞர்களின் பணியாக உள்ளது.

மூத்த கலைஞர்கள் அவமதிப்பா? எஸ்.வி.சேகர் குற்றச்சாட்டுக்கு விஷால் பதில்

சமீபத்தில் நடிகர் சங்கத்தின் அறக்கட்டளை பதவியை ராஜினாமா செய்த எஸ்.வி.சேகர், மலேசியாவில் நடந்த கலை நிகழ்ச்சிக்கு தனக்கு முறையான அழைப்பு அனுப்பப்படவில்லை

ஊதிய உயர்வை தற்காலிகமாக ஏற்றுக்கொண்ட தொழிற்சங்கம்: முடிவுக்கு வந்தது போக்குவரத்து போராட்டம்

ஊதிய உயர்வு உள்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கடந்த ஒரு வாரமாக போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் நடத்தி வந்த நிலையில் இன்று இதுகுறித்த வழக்கு ஒன்று சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது/

500 ரூபாய்க்கு அன்லிமிட்டட் பிளான் இருக்கும்போது ரூ.7500 தொலைபேசி படி தேவையா?

தமிழக சட்டமன்ற உறுப்பினர்களின் சம்பள உயர்வு குறித்த மசோதா இன்று சட்டமன்றத்தில் நிறைவேறியது. இதன்படி எம்.எல்.ஏக்களுக்கு 100% ஊதிய உயர்வு கிடைக்கும்.

விஜய்யை ஆதரித்த பிரபல நடிகரின் வீட்டை இடித்த மாநகராட்சி அதிகாரிகள்

தளபதி விஜய்யின் மெர்சல் திரைப்படம் வெளியானபோது பாஜக தலைவர்கள் அந்த படத்தில் இடம்பெற்ற ஜிஎஸ்டி குறித்த வசனங்களுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.