சென்னையில் ரஜினியை சந்திக்கின்றாரா மலேசிய பிரதமர்?

  • IndiaGlitz, [Thursday,March 30 2017]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' திரைப்படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் நடந்தபோது மலேசிய பிரதமர், மலாக்கா ஆளுனர் ஆகியோர் ரஜினியை வரவேற்று விருந்தளித்தனர் என்பது தெரிந்ததே.

இந்நிலையில் நாளை முதல் ஐந்து நாட்கள் மலேசிய பிரதமர் நஜீப் நசாக் இந்தியாவில் அரசுமுறை சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டுள்ளார். இதில் நாளை மற்றும் நாளை மறுநாள் என இரண்டு நாட்கள் அவர் சென்னையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். இந்த நிலையில் அவர் ரஜினியை மரியாதை நிமித்தம் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் மலேசிய பிரதமர், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழக ஆளுனர் வித்யாசாகர் ராவ் ஆகியோர்களை சந்திக்க இருப்பதாகவும், மற்றும் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளவிருப்பதாகவும் கூறப்படுகிறது. பின்னர் டெல்லி செல்லும் மலேசிய பிரதமர் நஜீப் நசாக், பாரத பிரதமர் நரேந்திரமோடி உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

More News

செம்மர கடத்தல் வழக்கு. நடிகை சங்கீதா கைது

செம்மரக்கடத்தலில் உடந்தையாக இருந்ததாக விமான பணிப்பெண்ணும் முன்னாள் நடிகையுமான சங்கீதா கொல்கத்தாவில் கைது செய்யப்பட்டார்...

சசிகலாவை ஆதரிக்க ரூ.5 கோடி. கருணாஸ் மீது புலிப்படை நிர்வாகிகள் புகார்

கடந்த சில நாட்களாக முக்குலத்தோர் புலிப்படை நிர்வாகிகளை கருணாஸ் நீக்குவதும், நிர்வாகிகள் கருணாஸை நீக்குவதுமான சம்பவங்கள் நடைபெற்று ஊடகங்களுக்கு தீனியை போட்டு வருகின்றன...

அக்சராஹாசனின் துணிச்சலான முடிவு

திருமணத்திற்கு முன்பே கர்ப்பம் என்பது நாளுக்கு நாள் பெருகி வரும் நிலையில் இதுகுறித்து போதனை செய்யும் திரைப்படம் ஒன்று பாலிவுட்டில் தற்போது தயாராகி உள்ளது...

சமுத்திரக்கனி படத்தில் இருந்து வரலட்சுமி விலக இவர்தான் காரணமா?

சமுத்திரக்கனி இயக்கிய வெற்றிப்படமான 'அப்பா' படத்தின் மலையாள ரீமேக் படமான 'ஆகாஷ் மிட்டாய்' என்ற படத்தின் படப்பிடிப்பு தற்போது கொச்சியில் நடைபெற்று வருகிறது...

'விஸ்வரூபம் 2' படத்துக்கு எது வேண்டுமானாலும் நடக்கலாம். கமல்ஹாசன்

உலக நாயகன் கமல்ஹாசன் நடித்து, தயாரித்து இயக்கிய 'விஸ்வரூபம்' படத்திற்கு ஏற்பட்ட தடை நாடு அறிந்தது. ஒருசில மத அமைப்புகளும், அன்றைய தமிழக அரசும் மாறி மாறி தடை போட்டது....