கபாலி படப்பிடிப்பிற்காக மலேசிய கவர்னரின் அதிரடி நடவடிக்கை
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'கபாலி' படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ரஜினி நடித்த 'சிவாஜி' படத்தை போலவே இந்த படத்திலும் ரஜினியின் அறிமுக காட்சி சிறையில் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சமீபத்தில் மலேசியாவில் உள்ள மலாக்கா பகுதியில் உள்ள சிறையில் 'கபாலி படத்தின் படப்பிடிப்பு நடந்ததாகவும், படப்பிடிப்புக்கு வசதியாக அங்கிருந்த 300 பெண் கைதிகளை வேறு இடத்திற்கு மாற்ற மலாக்கா கவர்னர் அதிரடி நடவடிக்கை எடுத்ததாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே மலாக்கா கவர்னர் ரஜினிக்கு மதிய விருந்தளித்து மரியாதை செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ரஜினியின் படப்பிடிப்பிற்காக சிறைக்கைதிகளை வேறு இடத்திற்கு மாற்றியது ஆச்சரியத்தை வரவழைத்த போதிலும் ஒருசில விமர்சனத்தையும் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout