சென்னையில் இளைஞர் கொலை: மலேசிய கள்ளக்காதலி காரணமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
சென்னையில் கடந்த மாதம் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவருடன் தகாத உறவு வைத்திருந்த மலேசிய பெண் இந்த கொலைக்கு காரணமாக இருக்குமா? என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.
திருச்சியை சேர்ந்த விஜய்ராகவன் என்பவர் மலேசியாவில் பணிபுரிந்தபோது அங்கு சூப்பர் மார்க்கெட் வைத்திருந்த நிர்மலா என்பவருடன் தகாத உறவில் இருந்ததாகவும், இதனையறிந்த நிர்மலாவின் கணவர் இருவரை கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் விஜயராகவன் மீண்டும் திருச்சிக்கே வந்துவிட்டார். இருப்பினும் நிர்மலா அவ்வப்போது திருச்சி வந்து விஜயராகவனை சந்தித்ததாக கூறப்படுகிறது. இதேபோல் பல முறை நிர்மலா திருச்சிக்கு வந்து விஜயராகவனை சந்தித்த நிலையில் ஒருமுறை நிர்மலாவை பின் தொடர்ந்து திருச்சி வந்த அவரது கணவர் இருவரையும் கையும் களவுமாக பிடித்து கண்டித்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த மாதம் 25ஆம் தேதி விஜயராகவன் சென்னை ஸ்டேன்லி மருத்துவமனை அருகே வெட்டுக்காயங்களுடன் பிணமாக இருந்தார். இவரை நிர்மலா கொலை செய்தாரா? அல்லது விஜயராகவன், நிர்மலா இருவரையும் நிர்மலாவின் கணவர் கொன்றாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout