"இந்தியாவைப் போல நாங்களும் குடியுரிமை திருத்தம் கொண்டு வரட்டுமா"..?! மலேசிய பிரதமர் மகாதீர் முகமது ஆதங்கம்.

  • IndiaGlitz, [Saturday,December 21 2019]

குடியுரிமை சட்டத் திருத்தம் குறித்து தன்னுடைய எதிர்ப்பை மலேசிய பிரதமர் மகாதீர் முகமது பதிவு செய்துள்ளார்.

குடியுரிமை சட்ட திருத்தம் தொடர்பாகவும், ஜாமியா மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்தும் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.உத்திர பிரதேச மாநிலத்தில் நேற்று நடைபெற்ற வன்முறையில் 6 பேர் உயிரிழந்தனர். ஆனாலும் டெல்லி, கர்நாடகா, தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களிலும் இன்று போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையியல் மலேசிய பிரதமர் மகாதீர் முகமது இந்தியாவில் குடியுரிமை திருத்தச் சட்டம் கொண்டு வருவதற்கான அவசியம் என்ன என்று கேள்வி எழுப்பி உள்ளார். இஸ்லாமிய சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்தும் அவற்றுக்கான தீர்வு குறித்தும் விவாதிப்பதற்காக கொலாம்பூரில் உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது.

அந்த மாநாட்டின் 2வது நாளில் பேசிய மலேசிய பிரதமர், “பன்முகத்தன்மை மற்றும் மதசார்பற்ற இந்தியாவில் இஸ்லாமியர்களின் குடியுரிமை பறிக்கும் விதமாக இதுப்போன்ற ஒரு சட்டம் நிறைவேறி உள்ளது வருத்தம் அளிக்கிறது. அதேப் போன்ற நடவடிக்கையை இங்கு மலேசிய அரசு எடுத்தால் என்ன நடக்கும் என்பது உங்களுக்கு தெரியும். இங்கு இருக்கும் பலர் இதனால் பாதிக்கப்படுவார்கள்.சுமார் 70 ஆண்டுகளுக்கு மேலாக இந்திய குடிமக்கள் எந்தவித பிரச்சனையுமின்றி இருந்து வாழ்ந்து வருகின்றனர். இந்த சூழலில் இதுப் போன்ற ஒரு சட்டம் கொண்டு வருவதற்கான அவசியம் என்ன?“ என்றார்.

மலேசியப் பிரதமர் மீண்டும் முற்றிலும் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார் என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதற்கு முன் காஷ்மீர் விவகாரத்திலும் மலேசிய பிரதமர் கருத்து தெரிவித்திருந்தார். கடந்த செப்டம்பர் மாதம் ஐ.நா பொதுசபையில் உரையாற்றிய போது இந்தியா வலுக்கட்டாயமாக காஷ்மீர் பகுதியை ஆக்கிரமித்திருப்பதாக கூறி இருந்தார் என்பது குறிப்பிடதக்கது.

More News

திமுக பேரணியில் நடிகர் சங்கம் பங்கேற்பா? பரபரப்பு தகவல்

குடியுரிமை சீர்திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 23-ஆம் தேதி திமுக தலைமையில் அனைத்து கட்சிகள் இணைந்து பிரம்மாண்டமான பேரணி ஒன்றை நடத்த உள்ளது.

#CAA #NRC.தொடரும் போராட்டங்கள்.. உத்திர பிரதேசத்தில் 9 பேர் பலி.

உத்தர பிரதேசத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடந்த போராட்டத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

திமுக பேரணியில் மக்கள் நீதிமய்யம்: கமல் எடுத்த திடீர் முடிவு!

சமீபத்தில் மத்திய அரசு சமீபத்தில் தாக்கல் செய்த குடியுரிமை சீர்திருத்த சட்டத்திற்கு எதிராக வரும் 23ஆம் தேதி திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் மாபெரும் பேரணி நடைபெற உள்ளது.

பாதம் தொட்டு வணங்கினால் மட்டுமே குடியுரிமை: சீமானுக்கு நித்தி நிபந்தனை?

குடியுரிமை சீர்திருத்த சட்டத்தால் எங்களுக்கு குடியுரிமை பறிபோனால் எந்த பிரச்சினையும் இல்லை என்றும் எங்கள் தலைவர் நித்தியானந்தா கைலாஷ் என்ற தனி நாட்டை உருவாக்கி இருக்கிறார்

சினிமாக்காரர்கள் கோழைகள், முதுகெலும்பு இல்லாதவர்கள்: விளாசிய பிரபல நடிகை!

திரைத்துறையினர் எதற்கெடுத்தாலும் பயப்படுகிறார்கள் என்றும் அவர்கள் கோழைகள் மற்றும் முதுகெலும்பு இல்லாதவர்கள் என்றும் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளது