மலேசியா எனக்கு இரண்டாவது வீடு: ரஜினிகாந்த்
Send us your feedback to audioarticles@vaarta.com
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பில் நேற்று மலேசியாவில் நடைபெற்ற நட்சத்திர கலைவிழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன், நடிகர் சங்க நிர்வாகிகள் மற்றும் கோலிவுட் திரையுலகின் நடிகர் நடிகைகள் பலர் கலந்து கொண்டனர்.
விழா தொடங்குவதற்கு முன்னர் ரஜினி, கமல் இருவரும் சுருக்கமான உரையாற்றினர். அப்போது ரஜினிகாந்த் பேசியபோது, என்னை வாழ வைத்த தமிழக மக்களை நன்கு வாழ வைக்க வேண்டும் என்பதே எனது அதிகபட்ச ஆசை. கபாலி படத்திற்கு பின்னர் இரண்டு ஆண்டுகள் கழித்து மலேசியாவில் உங்களை சந்திப்பது மகிழ்ச்சி. மலேசியா கிட்டத்தட்ட எனக்கு இரண்டாவது வீடு போன்றது. இன்னும் நிறைய விஷயங்கள் பேச வேண்டியுள்ளது, பின்னர் பேசுகிறேன்' என்றார்
அதேபோல் உலக நாயகன் கமல்ஹாசன் பேசியபோது, 'மலேசிய மக்களின் அன்புக்கு நன்றி. இளைஞர்கள் (நடிகர் சங்க நிர்வாகிகள்) மிக அற்புதமாக உழைத்து உள்ளனர். போட்டோவுக்கு போஸ் கொடுப்பதை விட வேலையில் கவனமாக இருப்பவர்கள் அதிகம். நடிகர் சங்க கட்டடத்தை ஒற்றுமையாக இருந்து முன்னரே கட்டியிருக்கலாம். இப்போதும் ஒன்றும் குறையில்லை, சிறப்பாக நடக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது, என்று கூறினார். மேலும் தற்கால அரசியலில் இளைஞர்களின் பங்கு குறித்து பேசிய கமல், 'இளைஞர்கள் தேர்ந்தெடுக்க வேண்டியது தலைமையை அல்ல திறமையை' என்று கூறினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments