மலேசியா எனக்கு இரண்டாவது வீடு: ரஜினிகாந்த்

  • IndiaGlitz, [Sunday,January 07 2018]

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பில் நேற்று மலேசியாவில் நடைபெற்ற நட்சத்திர கலைவிழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன், நடிகர் சங்க நிர்வாகிகள் மற்றும் கோலிவுட் திரையுலகின் நடிகர் நடிகைகள் பலர் கலந்து கொண்டனர்.

விழா தொடங்குவதற்கு முன்னர் ரஜினி, கமல் இருவரும் சுருக்கமான உரையாற்றினர். அப்போது ரஜினிகாந்த் பேசியபோது, என்னை வாழ வைத்த தமிழக மக்களை நன்கு வாழ வைக்க  வேண்டும் என்பதே எனது அதிகபட்ச ஆசை. கபாலி படத்திற்கு பின்னர் இரண்டு ஆண்டுகள் கழித்து மலேசியாவில் உங்களை சந்திப்பது மகிழ்ச்சி. மலேசியா கிட்டத்தட்ட எனக்கு இரண்டாவது வீடு போன்றது. இன்னும் நிறைய விஷயங்கள் பேச வேண்டியுள்ளது, பின்னர் பேசுகிறேன்' என்றார்

அதேபோல் உலக நாயகன் கமல்ஹாசன் பேசியபோது, 'மலேசிய மக்களின் அன்புக்கு நன்றி. இளைஞர்கள் (நடிகர் சங்க நிர்வாகிகள்) மிக அற்புதமாக உழைத்து உள்ளனர். போட்டோவுக்கு போஸ் கொடுப்பதை விட வேலையில் கவனமாக இருப்பவர்கள் அதிகம். நடிகர் சங்க கட்டடத்தை ஒற்றுமையாக இருந்து முன்னரே கட்டியிருக்கலாம். இப்போதும் ஒன்றும் குறையில்லை, சிறப்பாக நடக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது, என்று கூறினார். மேலும் தற்கால அரசியலில் இளைஞர்களின் பங்கு குறித்து பேசிய கமல், 'இளைஞர்கள் தேர்ந்தெடுக்க வேண்டியது தலைமையை அல்ல திறமையை' என்று கூறினார்.

 

More News

110 திரையரங்குகளில் 25 நாட்கள்: அருவியின் அருமையான சாதனை

எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி வெளியான சின்ன பட்ஜெட் படமான 'அருவி' மிகப்பெரிய வெற்றியை பெற்றது மட்டுமின்றி வசூலிலும் சாதனை செய்து வருகிறது.

கமல் அறிவுரையை ஏற்றுக்கொள்ள தயார்: அதிமுக அமைச்சர்

உலக நாயகன் கமல்ஹாசன் கடந்த சில மாதங்களாகவே தமிழக அரசுக்கு எதிராக விமர்சனம் செய்து வருவதோடு, பல்வேறு பிரச்சனைகளை தீர்க்க அறிவுரையும் வழங்கி வருகிறார்.

இந்த ஐந்து வார்த்தைகளை ரஜினியால் சொல்ல முடியுமா? அன்புமணி

ரஜினிகாந்த் ஐந்தே ஐந்து வார்த்தையை கூறுவாரா? மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கணும்,. இந்த ஐந்து வார்த்தையை ரஜினியால் சொல்ல முடியுமா?

அரசியல்வாதிகளுக்கு ஆர்.ஜே.பாலாஜியின் பதிலடி

கடந்த சில மாதங்களாக கட்சி பேதமின்றி ஒருசில அரசியல்வாதிகள் திரையுலகினர்களிடம் மோதுவதையே வழக்கமாக கொண்டுள்ளனர். அவர்களுடைய விமர்சனங்கள் ரஜினி, கமல், விஜய் உள்பட பலரின் மீது பாய்ந்து கொண்டிருக்கின்றது.

ஆன்மிக அரசியல் என்றால், அது பாஜக அரசியல் தான்: தினகரன்

அரசியலுக்கும் ஆன்மீகத்திற்கும் சம்பந்தமில்லை. ஆன்மீகம் என்றாலே மதம் தான். ஆன்மீகம் என்பது மதம் இல்லாமல் இல்லை