பெரிய ஸ்டார் இல்லை.. பெரிய பட்ஜெட் இல்லை.. 50 கோடிக்கும் மேல் சம்பாதிக்கும் மலையாள திரைப்படங்கள்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
மலையாள திரையுலகில் மோகன்லால், மம்முட்டி போன்ற சூப்பர் ஸ்டார்கள் இருந்தாலும் அங்கு கதைக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும் அதன் பிறகுதான் ஹீரோ, ஹீரோயின் மற்ற கலைஞர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது என்பதும் அனைவரும் அறிந்ததே. அதனால்தான் மலையாள திரைப்படங்கள் குறைந்த பட்ஜெட்டில் உருவாக்கினால் கூட அவை மிகப்பெரிய வெற்றி பெற்று வருகிறது என்பதும் சமீபத்தில் வெளியான 2 சின்ன பட்ஜெட் படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்று 50 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழில் குறைந்தபட்சம் 100 கோடி பட்ஜெட்டில் அதிகபட்சம் 500 கோடி வரை செலவு செய்யப்படுகிறது. ஆனால் அந்த பணம் முழுவதும் படத்தின் மேக்கிங்கிற்காக செலவு செய்யாமல் நடிகர் நடிகைகளின் சம்பளத்திற்காகவே முக்கால்வாசி செலவு செய்யப்படுகிறது.
பெரிய ஸ்டார்கள் நடித்தால் போதும் கதையை பற்றி கவலைப்படாமல் படங்கள் எடுத்து கையை சுட்டுக் கொண்டிருக்கும் கோலிவுட் தயாரிப்பாளர்கள் மத்தியில், மலையாள திரையுலகில் சின்ன பட்ஜெட்டில் உருவாகும் படங்களை தயாரித்து கோடிக்கணக்கில் சம்பாதித்து வருகின்றனர். இதற்கு சமீபத்திய உதாரணமாக ’மஞ்சும்மாள் பாய்ஸ்’ மற்றும் ‘ப்ரேமலு’ ஆகிய திரைப்படங்களை கூறலாம்.
இந்த இரண்டு திரைப்படங்களிலும் பெரிய ஸ்டார் இல்லை, பெரிய பட்ஜெட் இல்லை, பிரபலமான இயக்குனர்களும் இல்லை, ஆனால் கதை அழுத்தமானது என்பதும் விறுவிறுப்பான திரைக்கதை என்பதால் தான் இந்த இரண்டு படங்களும் வெற்றி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக ’மஞ்சும்மாள் பாய்ஸ்’ திரைப்படம் வெறும் ஐந்து கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு தற்போது ஒரே வாரத்தில் 50 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. அதேபோல் ‘ப்ரேமலு’ திரைப்படம் வெறும் 3 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு மூன்று வாரங்களில் 70 கோடி வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கோலிவுட் திரையுலகில் பெரிய ஸ்டார்களை நம்பாமல் இனி கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து அழுத்தமான திரைக்கதையில் படம் செய்ய வேண்டும் என்றும் இல்லையென்றால் தமிழ் திரை உலகத்திற்கு பெரும் ஆபத்து என்றும் விஷயம் தெரிந்த முன்னணி திரையுலக பிரபலங்கள் தெரிவித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments