மலையாள மீடியாக்களின் மனிதாபிமானம்
Send us your feedback to audioarticles@vaarta.com
கேரளாவில் கடந்த இரண்டு வாரங்களாக வெளுத்து வாங்கும் கனமழையால் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் மட்டும் சுமார் 100 பேர் பலியாகியுள்ளனர். வெள்ளத்தில் இருந்து மக்களை மீட்க மத்திய மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.
இந்த நிலையில் ஒரு நாட்டின் நான்காவது தூண் என்று கூறப்படும் மீடியாக்கள் வெள்ள செய்திகளை வெளியிடுவதில் பொறுப்புடன் நடந்து கொள்கின்றன. குறிப்பாக மலையாள சேனல்கள் விளம்பரங்கள் ஒளிபரப்புவதை நிறுத்திவிட்டு முழுக்க முழுக்க வெள்ளம் குறித்த செய்திகளுக்கு முக்கியத்துவம் தருகின்றன. ஒவ்வொரு பகுதிக்கும் வழங்கப்பட்டிருக்கும் ஹெல்ப்லைன் எண்களை தருவது, தொலைபேசி மூலம் கேட்கப்படும் உதவிகளுக்கு உடனடியாக பதில் கூறுவது என சேனல்களின் சேவை பெருமைக்குரியதாக உள்ளது. அதேபோல் அங்குள்ள அரசியல்வாதிகளும் ஒருவரை ஒருவர் குறை கூறாமல் மீட்புப்பணிக்கு எதிர்க்கட்சிகளும் முழு ஒத்துழைப்பு கொடுத்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
நம் சென்னையில் வெள்ளம் வந்தபோது நிவாரண பொருட்கள் மீது ஸ்டிக்கர் ஒட்டிய செய்திக்கே நமது மீடியாக்களும் சமூகவலைத்தளங்களும் முக்கியத்துவம் தந்தன. மேலும் வெள்ள மீட்புப்பணியில் அரசியல்வாதிகள் விடும் போட்டி அறிக்கைகளுக்கு நம்மூர் மீடியாக்கள் முக்கியத்துவம் தந்த நிலையில் மலையாள சேனல்களை பார்த்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது அதிகம் இருப்பதாக உணரப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout