மலையாள மீடியாக்களின் மனிதாபிமானம்

  • IndiaGlitz, [Friday,August 17 2018]

கேரளாவில் கடந்த இரண்டு வாரங்களாக வெளுத்து வாங்கும் கனமழையால் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் மட்டும் சுமார் 100 பேர் பலியாகியுள்ளனர். வெள்ளத்தில் இருந்து மக்களை மீட்க மத்திய மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.

இந்த நிலையில் ஒரு நாட்டின் நான்காவது தூண் என்று கூறப்படும் மீடியாக்கள் வெள்ள செய்திகளை வெளியிடுவதில் பொறுப்புடன் நடந்து கொள்கின்றன. குறிப்பாக மலையாள சேனல்கள் விளம்பரங்கள் ஒளிபரப்புவதை நிறுத்திவிட்டு முழுக்க முழுக்க வெள்ளம் குறித்த செய்திகளுக்கு முக்கியத்துவம் தருகின்றன. ஒவ்வொரு பகுதிக்கும் வழங்கப்பட்டிருக்கும் ஹெல்ப்லைன் எண்களை தருவது, தொலைபேசி மூலம் கேட்கப்படும் உதவிகளுக்கு உடனடியாக பதில் கூறுவது என சேனல்களின் சேவை பெருமைக்குரியதாக உள்ளது. அதேபோல் அங்குள்ள அரசியல்வாதிகளும் ஒருவரை ஒருவர் குறை கூறாமல் மீட்புப்பணிக்கு எதிர்க்கட்சிகளும் முழு ஒத்துழைப்பு கொடுத்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

நம் சென்னையில் வெள்ளம் வந்தபோது நிவாரண பொருட்கள் மீது ஸ்டிக்கர் ஒட்டிய செய்திக்கே நமது மீடியாக்களும் சமூகவலைத்தளங்களும் முக்கியத்துவம் தந்தன. மேலும் வெள்ள மீட்புப்பணியில் அரசியல்வாதிகள் விடும் போட்டி அறிக்கைகளுக்கு நம்மூர் மீடியாக்கள் முக்கியத்துவம் தந்த நிலையில் மலையாள சேனல்களை பார்த்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது அதிகம் இருப்பதாக உணரப்படுகிறது.

More News

நயன்தாராவின் முதல் சாதனை

பொதுவாக ரஜினிகாந்த், அஜித் ,விஜய், சிவகார்த்திகேயன் போன்ற மாஸ் நடிகர்களின் படங்கள் மட்டுமே சென்னை உள்பட முக்கிய நகரங்களில் அதிகாலை காட்சிகள் திரையரங்குகள் திரையிடப்படுவது வழக்கம்.

கவிதை மனம் கொண்டவனுக்கு கண்ணியம் இருக்கும்: வாஜ்பாய்க்கு வைரமுத்து புகழாரம்

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நேற்று மாலை காலமான தகவல் ஒட்டுமொத்த இந்தியாவையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

வாஜ்பாய் மறைவுக்கு ரஜினிகாந்த், சச்சின் இரங்கல்

முன்னாள் பாரத பிரதமர் அடல்பிஹாரி வாஜ்பாய் கடந்த சில நாட்களாக உடல்நலமின்றி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சற்றுமுன்னர் சிகிச்சையின் பலனின்றி காலமானார்.

முதல்வருடன் நடிகர் கார்த்தி சந்திப்பு

கடந்த சில நாட்களாக கேரளாவில் தென்மேற்கு பருவமழை காரணமாக வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டு சுமார் 100க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.

மழைநீர் வாய்க்காலில் மீட்ட குழந்தையை வளர்க்க ஆசைப்படும் நடிகை

நேற்று காலை சென்னை வளசரவாக்கம் பகுதியில் மழைநீர் கால்வாயில் பச்சிளம் குழந்தை அழுதபடி இருந்ததை பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர் என்பது தெரிந்ததே