கொரோனாவில் இருந்து மீண்ட மகன்: மருத்துவர்களுக்கு நன்றி கூறிய மலையாள இயக்குனர்
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டிருந்த தனது மகனை குணமாக்கிய கேரள மருத்துவர்களுக்கு பிரபல மலையாள இயக்குநர் பத்மகுமார் நன்றி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவு செய்துள்ளார்.
பிரபல மலையாள திரையுலக இயக்குனர் பத்மகுமார் என்பவரின் மகன் ஆகாஷ் என்பவர் கடந்த மார்ச் மாதம் 15ஆம் தேதி பாரிஸில் இருந்து கேரளாவுக்கு திரும்பினார். வெளிநாட்டிலிருந்து திரும்பியவர்கள் அனைவரும் இரண்டு வாரங்கள் தனிமைப்படுத்துதலை கடைபிடிக்க வேண்டும் என்று கேரள அரசு அறிவுறுத்தியதை அடுத்து ஆகாஷ் இரண்டு வாரங்கள் தனிமைப்படுத்தபப்ட்டார்.
அப்போது அவருக்கு சோதனை செய்த போது கொரோனா தாக்கியிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து ஆகாஷ் மற்றும் அவருடன் பாரீசில் இருந்த வந்திருந்த நண்பர் ஒருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில் கேரள மருத்துவர்களின் தரமான சிகிச்சை காரணமாக தனது மகனும் அவருடைய நண்பரும் தற்போது கொரோனாவில் இருந்து மீண்டு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர் என்பதை பத்மகுமார் தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
எனது மகன் மற்றும் அவரது நண்பர் எல்தோ மாத்யூ ஆகிய இருவரும் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். அந்த மருத்துவமனையில் பணிபுரிந்த மருத்துவர்கள் நர்சுகள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் அனைவரும் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணிபுரிந்து கொரோனாவிற்கு எதிரான போரில் தங்கள் உயிரையே பணயம் வைத்து பணி செய்ததை நான் நேரில் பார்த்தேன்.
இதற்கெல்லாம் மேலாக எங்கள் மாநிலத்தின் முதல்வர் பினரயி விஜயன் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா மற்றும் எங்கள் மாவட்ட கலெக்டர் சுகாஸ் ஆகியோர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். கேரள மாநில அரசு கொரோனாவுக்கு எதிரான போரில் மிக சிறப்பாக செயல்பட்டு வருவது எனக்கு மிகப்பெரிய பெருமையாக இருக்கிறது. அவர்களுக்கு ஒரு பெரிய சல்யூட் என்று குறிப்பிட்டுள்ளார். இயக்குனர் பத்மநாபனின் இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout